பள்ளி மாணவி பலாத்காரம் ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது: 100 மாணவிகளை சீரழித்ததாக புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார்(57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆசிரியர் சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் … Read more

மே 25-ல் 3-வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. குற்றாலத்தில் 8 வார்டுகளை கொண்ட பேரூராட்சிகளில் திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்தன. சமநிலை காரணமாக தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்ய முடியாதபடி இழுபறி நிலை நீடித்து வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை வைத்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

ராஜஸ்தான்: தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை வைத்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். ராஜஸ்தான் உதய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.

ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 16,17-ம் தேதிகளில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. ஜவுளித்துறை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். நவஜோத் சித்துவை தலைவராக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஜாக்கர் விலக்கப்பட்டவர். பஞ்சாப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்திருந்தார். 

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அண்ணாமலை,கருப்பு முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றியதற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

டெல்லியில் 30 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவு!: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஆணை..!!

டெல்லி: டெல்லியில் 30 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். தற்போது சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த … Read more

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்தினர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தியது, கொரோனா நிவாரண நிதியை அதிகரித்து வழங்கியது ஆகியவற்றுக்காக நன்றி தெரிவித்தனர். 

டெல்லி தீ விபத்து: நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் 27 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், தீ விபத்தில் தீக்காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.       

சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை சூளேரிக்காடு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த்- மனைவி அனுராதா மயிலாப்பூர் வீட்டில் மே 7-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.