பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையில் ஒலிபெருக்கி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடிவு

பெங்களூரு: பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க இஸ்லாமிய தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ஒலிபெருக்கியில் அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவை மீறாத வண்ணம் ஒலி கட்டுப்பாட்டு கருவியை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.50 லட்சம் மதிப்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை … Read more

தங்கம் வாங்க ஏற்ற சமயம்..!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,737-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,858 பேருக்கு கொரோனா.. 3,355 பேர் குணமடைந்தனர்..11 பேர் பலி

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,858 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,19,112 -ஆக உயர்ந்தது.* புதிதாக 11 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை

பாங்காக்: தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் துவங்கியது காங்கிரசில் மாற்றம் அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்வது தொடர்பாக 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சோனியா காந்தி, கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரை பலிகடா ஆக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியில் தேவையான மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை முடிவு செய்தது. மேலும், 2024ம் ஆண்டு நடக்கும் … Read more

சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: சுவிட்சர்லாந்தில் வரும் 22-26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல்வர் செல்ல முடியாத சூழல் உருவாகினால் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

புராதன பொருள் மோசடி வழக்கு நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்த மோன்சன், பழங்கால புராதன பொருள் என்று சொல்லி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தார். மேலும், வெளிநாட்டில் புராதன பொருட்களை விற்பனை செய்த வகையில் தனக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர உள்ளதாகவும் சொல்லி, பலபேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.இது குறித்து போலீசார் நடத்தி விசாரணைகடந்த வருடம் மோன்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோகன்லால் பழங்கால புராதன பொருட்கள் மீது அதிக ஆர்வம் … Read more