கொரோனாவுக்கு உலக அளவில் 62,86,458 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,86,458 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 52,02,69,798 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47,48,93,985 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,181 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள  ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆணையம், கூடுதலாக 7 தொகுதிகளை உருவாக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நகரை சேர்ந்த  2 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், அசாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் மற்றும் … Read more

போரினால் போலந்துக்கு மாற்றம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் இந்திய தூதரகம்

புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்திய தூதரகம் வரும் 17ம் தேதி முதல் செயல்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம்  தேதி போர் தொடுத்தது. தற்போது, 2 மாதங்களை கடந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அங்கு செயல்பட்டு வந்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டன. இந்தியா தனது தூதரகத்தை அண்டை நாடான போலந்தில் … Read more

பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   ஏழை, எளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது. அதேபோன்று, பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

எல்ஐசி பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயம்: பாலிசிதாரர்கள், ஊழியர்களுக்கு சலுகை

புதுடெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்கு ஒன்றின் விலையை ரூ.949 ஆக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இது வரும் 17ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சுமார் ₹21,000 கோடி திரட்ட 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டன. பங்கு … Read more

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் பிரகாஷ் ராஜ்?

ஐதராபாத்: முன்னதாக பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், அவரது எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரகாஷ் ராஜ், சந்திரசேகர ராவை சந்தித்தார். அதனால் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலங்கானாவில் அடிபடுகிறது. இவர் … Read more

பாதுகாப்பு அளிப்பதாக கூறி குண்டுக்கு இரையாக்குவதா? காஷ்மீரி பண்டிட் படுகொலையை கண்டித்து வெடித்தது போராட்டம்: போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்து  ராகுல் பட் என்ற அதிகாரியை தீவிரவாதிகள்  சுட்டு கொன்றதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் பண்டிட்களின் போராட்டம் வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டம், சடூரா தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்து ராகுல் பட் என்ற அதிகாரியை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர். அவர் பண்டிட் என்பதை அறிந்து, அவர்தான் ராகுல் பட் என்பதை உறுதிப்படுத்திய பிறகு இந்த காரியத்தை அவர்கள் செய்தனர். சிறுபான்மையினரான பண்டிட்கள் மீது தீவிரவாதிகள் … Read more

போலீசாருக்கு ஆக்சிமீட்டர்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, 30 வயது முதல் 60 வயது வரையுள்ள காவலர்கள் தங்களது உடல் வெப்ப நிலை, நாடித்துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்யும் வகையில் ₹1 கோடி மதிப்பில் 14,972 ஆக்சிமீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 150 காவலர்களுக்கு ஆக்சிமீட்டர் கருவிகளை … Read more

திட்டமிட்டப்படி மே 21ம் தேதி மருத்துவ முதுநிலை நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 21ம் தேதி 2022-க்கான முதுநிலை நீட் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022ம் ஆண்டு நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில், ‘ஏற்கனவே 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால், 2022க்கான தேர்வை நடத்தினால் பெரும் குழப்பம் ஏற்படும். எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க … Read more

மேனேஜரை எரிக்க முயன்ற தூய்மை பணியாளர் கைது

திருவொற்றியூர்: எழும்பூரை சேர்ந்தவர் அசோக்குமார்(53), தூய்மை பணியாளர். தினமும் குடித்து விட்டு வேலைக்கு வந்துள்ளார். இதனால் மாதவரம் மண்டல மேலாளர் பாஸ்கரன்(31), மேல் அதிகாரியிடம் புகாரளித்தார். அதன்படி அசோக்குமாரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அசோக்குமார் நேற்று குடிபோதையில் பாஸ்கரன் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றார்.புகாரின்படி மாதவரம் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.