ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் அதிகாரிகள் குழு கள ஆய்வு செய்ய தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. ‘இந்த  மசூதியின் சுற்றுச்சுவருடன் இணைந்து உள்ள சிங்கார கவுரியம்மன் கோயில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்,’ என்று வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த … Read more

சென்னை ரேஷன் கடைகளில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

சென்னை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை விடுமுறையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: காத்திருப்பு அறையில் காலை உணவு வெயிலை சமாளிக்க சிகப்பு கம்பளம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை விடுமுறையில் வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கோயில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி  கூறியதாவது: கோடை விடுமுறையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால், அதிகளவு … Read more

தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை தேவை: வைகோ

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை களமருதூர் அரசு பள்ளியில் +1 தேர்வு மைய கண்காணிப்பளார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.  தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து தேர்வெழுதக் கூடாது என மாணவிகளை தடுத்த கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை தேவை என்று வைகோ தெரிவித்துள்ளார்   

வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை, தொழில், காரணமாக வெளிநாடு செல்பவர்களுக்கு 9 மாத இடைவெளிக்கு பதிலாக 3 மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் தீவிபத்து..:20 பேர் உயிரிழப்பு என தகவல்

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் தீவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முந்தகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரின் உடல் மீட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்க போராடி வருகின்றனர்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை..!!

ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் பூஸ்டர் சோதனை  நடத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ரக ராக்கெட்டில் பொருத்துவதற்கான ஹெச்.எஸ்.200 ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சோதனையின் போது 700 அளவுகோள்கள் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த HS200 ராக்கெட் பூஸ்டரில் 203 டன் திட எரிபொருள் ஏற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. … Read more

எல்ஐசி பங்குகள் தலா ரூ.949 கோடிக்கு ஒதுக்கீடு

டெல்லி: எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பங்கு ஒன்று ரூ.949 என்ற விலையில் அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.60ம் ஊழியர்களுக்கு தலா ரூ.45ம் தள்ளுபடி விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.902ம் அதிகபட்ச விலையாக ரூ.949ம் எல்ஐசி நிர்ணயித்திருந்தது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் தீவிபத்து..:16 பேர் உயிரிழப்பு என தகவல்

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் தீவிபத்தில் 16 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முந்தகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் உடல் மீட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்க போராடி வருகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 44வது  செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில்  சிறப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு அளிக்க ஜகன்நாதன் தலைமையில் குழுவும், பயண திட்டங்களை வகுக்க கோபால்  தலைமையில் குழுவும், தொடக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகளுக்கு கார்த்திகேயன் குழுவும், பாதுகாப்புக்கு சைலேந்திர பாபு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 18 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது