மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90% வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனத்தின் புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மருந்துக்கு ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது; ஊசி மூலம் ஒரே முறை மருந்து செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20% வரை குறைய வாய்ப்பு உள்ளது. 2021 டிசம்பர் வரை உலகம் முழுவதும் … Read more

திமுக பிரமுகர் தலை கூவம் ஆற்றில் வீச்சு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ராயபுரத்தில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் சக்க்ரபாணியின் தலை கூவம் ஆற்றில் வீசபட்டது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள் , மணலி திமுக நிர்வாகி சக்க்ரபாணியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டிவைத்திருந்த பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரப்பாணியை கொலை செய்த  தமிம்பானு(40), அவரது உறவினர் வாசிம் பாஷா(36) கைது செய்யப்பட்டனர் 

ஏப்ரலில் 40 பில்லியன் டாலர் மதிப்பு சரக்குகள் ஏற்றுமதி: மத்திய அரசு

டெல்லி: ஏப்ரல் மாதம் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சரக்கு ஏறுமதி 30% அதிகரிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு கூறியுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் 127.69%, மின்னனு பொருட்கள் 7.69% ,உணவு தானியங்கள், 60.83%, காபி 59.38% பதப்படுத்தபட்ட உணவுகள் 38.82%, தோல்பொருட்க்கள் 36.68% ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 90 சதவீத கடன் உத்தரவாதம் வழங்கும் அரசு தமிழ்நாடு அரசு தான்: அமைச்சர் த.மோ அன்பரசன் பேட்டி

சென்னை: கடந்த நிதியாண்டில் மட்டும் 3545 நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி முதலீடு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் த.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். 6838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 5512 விண்ணப்பங்கள்  ஏற்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 சதவீத கடன் உத்தரவாதம் வழங்கும் அரசு தமிழ்நாடு அரசு தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 27ல் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு

டெல்லி: தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளத்தில் மே 27ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அந்தமான் – நிகோபார் தீவு பகுதிகளில் 27 முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நிற்க உத்தரவு: போக்குவரத்துறை துறை

செங்கல்பட்டு: திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல போக்குவரத்துறை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல ஓட்டுநர் நடந்துனர்களுக்கு உரிய நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது; பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு புதிய மனு தாக்கல்.!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பேரறிவாளனை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. பேரறிவாளனை விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர், தன்னிச்சையாக முடிவெடுக்கவோ, … Read more

அம்மா மினி கிளினிக் பணியாளர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: நகர்ப்புற மருத்துவ மையங்களில் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.588 கோடி ஒதுக்கீடு செய்த்துள்ளனர். நகர்ப்புற மருத்துவ மையங்கள் அமைக்க 140 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'எல்.ஐ.சி. பங்குகள் தலா ரூ.949க்கு ஒதுக்கீடு; மே 17ல் பட்டியல்': ஒன்றிய அரசுக்கு ரூ.22,557 கோடி வருவாய்..!!

டெல்லி: எல்.ஐ.சி. பங்குகளை விண்ணப்பித்தவர்களுக்கு பங்கு ஒன்று ரூ.949 என்ற விலையில் அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.60ம், ஊழியர்களுக்கு தலா ரூ.45ம் தள்ளுபடி விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பங்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.902ம், அதிகபட்ச விலையாக ரூ.949ம் எல்.ஐ.சி. நிர்ணயித்திருந்தது. 22.13 கோடி பங்குகளை எல்.ஐ.சி. விற்பனைக்கு விட்ட நிலையில் அதைபோல்  3 மடங்கு விண்ணப்பங்களால் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் இந்திய … Read more

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய கேப்டன் விலகல்

லண்டன்: இந்தோனேசியா – ஜகார்டாவில் மே 23 முதல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய கேப்டன் விலகினார். இந்திய ஹாக்கி கேப்டன் ரூபிந்தர் பால் சிங்-குக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ரூபிந்தர் பால் சிங் அணியில் இருந்து விலகியதால், தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பிரேந்தர் லக்ரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.