கோவிலுக்கு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து :2 பேர் உயிரிழப்பு 22 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநில கத்ரா அருகே பேருந்தில் திடீரென எஞ்சின் பகுதியில் தீப்பிடித்ததால்  2 பேர் உயிரிழந்தனர்  22 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது. வைஷ்னவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார்கள். 

இந்தியாவில் தனது மின்சார கார்களை விற்கும் திட்டத்தை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் நிறுத்தி வைப்பு

வாஷிங்டன்: இந்தியாவில் தனது மின்சார கார்களை விற்கும் திட்டத்தை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. டெஸ்லாவின் மின்சார கார்கள் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு குறைக்க வேண்டும் என அந்நிறுவனம் கூறி வருகிறது. டெஸ்லா மின்சார கார்கள் மீதான இறக்குமதி வரியை அந்நிறுவனம் கோரியபடி குறைக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது; ரூ.3.16 லட்சம், 14 செல்போன், கார் பறிமுதல்

பிரயாக்ராஜ்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் ரொக்கம், 14 செல்போன்கள், கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரபிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு (பிரயாக்ராஜ் பிரிவு) தாகூர் டவுன் பகுதியில் சிலர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், ஆறு பேரை கைது செய்தனர். … Read more

சுகன்யான்- இஸ்ரோவின் பூஸ்டர் ராக்கெட் சோதனை வெற்றி

இஸ்ரோ: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் சுகன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் பூஸ்டர் சோதனை  நடத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ரக ராக்கெட்டில் பொருத்துவதற்கான ஹெச்.எஸ்.200 ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!: பாஜகவின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவாலை சந்திக்கிறது..சிந்தனை அமர்வு மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு..!!

உதய்பூர்: பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரி அமைப்பின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகிறது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் … Read more

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.544 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,755-க்கும், சவரன் ரூ.38,040க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20க்கு விற்கப்படுகிறது.

உஜ்வாலா திட்டம் தோல்வி?: 2 கோடி பயனாளிகள் இலவச சிலிண்டரை பயன்படுத்துவதில்லை..90 லட்சம் பேர் மறு சிலிண்டர் வாங்கவில்லை..!!

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் சுமார் 2 கோடி பேர் அதனை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது. சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள் ஒருமுறை கூட சிலிண்டர் வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016ம் ஆண்டில் பிரதமர் மோடியால் தொடங்கி … Read more

ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கோவை: தமிழ் மிகவும் பழமையான உயர்ந்த மொழி என கோவை பாரதியார் பல்கலை. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மாநில மொழிகள் வளர வேண்டும். ஒன்றிய அரசு மொழியை திணிக்கவில்லை; புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம் எனவும் கூறினார்.

கட்சி அமைப்பில் மாற்றம், தேர்தல் தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை; காங்கிரசின் 3 நாள் மாநாடு ராஜஸ்தானில் தொடங்கியது.!

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அதிர்ச்சியடைந்த குலாம் நபி ஆசாத், கபில்சிபல், சசி தரூர், ராஜ் பப்பர் உள்ளிட்ட ஜி-23 எனப்படும் மூத்த 23 தலைவர்கள் தலைமை மாற்றத்தை வலியுறுத்தி கட்சியின் இடைக்கால … Read more

தமிழக வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை

திருப்பூர்: தமிழக வரலாற்றில் முதன்முறையாக பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பஞ்சு விலை ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.