நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21-ம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21-ம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும். முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீட் தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: 21ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்; NEET PG கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்; அரசு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உலக செவிலியர் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா-ஏராளமானோர் பங்கேற்பு

சித்தூர் :  உலக செவிலியர் தினத்தையொட்டி சித்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். சித்தூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முதன்மை செவிலியர் வரலட்சுமி பாய், முதன்மை மருத்துவர் நாயக் ஆகியோர் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறி பரிசு வழங்கினர்.இதையடுத்து முதன்மை செவிலியர் வரலட்சுமி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர்கள் தினம் … Read more

இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்க வாய்ப்பு?

இலங்கை பிரதமராக ரணில் பொறுப்பேற்ற நிலையில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக ஜப்பான் நாடு 2 பில்லியன் டாலர்களை கடனாக அளிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய எக்சிம் வங்கி தன் பங்குக்கு 1.3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க உள்ளதாகவும் இலங்கை தகவல் தெரிவித்துள்ளது.

15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் நாப்கினுக்கு பதில் துணியையே பயன்படுத்தும் அவலம்

டெல்லி: 15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் இன்னும் மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதில் துணிகளையே பயன்படுத்துவதாக தேசிய குடும்பநல சுகாதார ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 7 லட்சம் பெண்களிடமும், 1 லட்சம் ஆண்களிடமும் 2016-2021ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது

புதுச்சேரி: கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

திருக்கழுக்குன்றம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே கீரப்பாக்கத்தில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த பேருந்து, எதிரே வந்த கார் மீது மோதியது. விபத்தில் காரில் வந்த தனியார் கல்லூரி மாணவன் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 90 லட்சம் பேர் மறு சிலிண்டர் வாங்கவில்லை?

டெல்லி: ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 90 லட்சம் பேர் மறு சிலிண்டர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் ஒரே ஒரு முறை மட்டும் மறு சிலிண்டர் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்திரசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்ட தகவலில் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின்வேலியை மிதித்த மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.