தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு

மும்பை: தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஜினியின் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவருடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பணி புரியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

திருவேற்காட்டில் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு

திருவேற்காடு: திருவேற்காட்டில் உள்ள எஸ்.எஸ்.பாண்டியன் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட ஸ்ரீதர்(22), பரத்குமார்(20) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க திருவேற்காடு போலீசில் பாதிக்கப்பட்ட 2 பேர் புகார் அளித்துள்ளனர்.

முறைகேடாக நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி நியமனம் தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், ‘அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அதேப்போன்று கடந்த 05.12.2016ம் ஆண்டு முதல் இன்று வரையில் மாற்றுக் கட்சிக்கு செல்லாத நபர்களின் பட்டியலை தயார் செய்தும், குறிப்பாக 5வருடம் கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்த ஒருவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க ஆணையம் உத்தரவிட வேண்டும்.மேலும் … Read more

டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்கிற்கு விற்கப்பட்டதால் 2 உயர் அதிகாரிகள் பதவி விலகல்

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வசம் செல்வதால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 உயர் அதிகாரிகள் பதவி விலக உள்ளனர். ஆய்வு பிரிவில் பொது மேலாளராக உள்ள கைவோன் பெக்போர், அதிகாரி புரூஸ் பாக் ஆகியோர் வெளியேறுகின்றனர்.

சிரஞ்சீவி தங்கையாக தான்யா

ஐதராபாத்: மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம், ‘லூசிஃபர்’. தற்போது இதன் தெலுங்கு ரீமேக்கை ‘காட்பாதர்’ என்ற பெயரில் மோகன் ராஜா ரீமேக் செய்து இயக்கி வருகிறார். சிரஞ்சீவி, நயன்தாரா, பிருத்விராஜ், பிஜு மேனன், இயக்குனர் புரி  ஜெகன்நாத் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விரைவில் பிரபுதேவா நடனப் பயிற்சியில் சிரஞ்சீவி, சல்மான்கான் இணைந்து ஆடும் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவி தங்கை … Read more

வடகொரியாவில் முதல் கொரோனா பலி: 1.87 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பியோங்யாங்: வடகொரியா நாட்டில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 6 பேரில் ஒருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா பாதித்துள்ளது. இதனனை அடுத்து 1,87,000 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

காமெடிக்கு மாறிய தமன்னா

ஐதராபாத்: மராத்தி, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், தமன்னா. தற்போது தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கில் ‘குர்துண்டா சீதாகாலம்’, ‘எஃப் 3’, ‘போலா சங்கர்’, இந்தியில் ‘பிளான் ஏ பிளான் பி’, ‘போலே சூடியன்’, ‘பப்ளி பவுன்சர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘எஃப் 3’ என்ற படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து தமன்னா கூறுகையில், ‘படத்தில் … Read more

மே-13: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சல்மான்கான் படத்தில் நயன்தாரா

மும்பை: தமிழில் ‘O2’, ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்ட்’, இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ‘லயன்’, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘காட்பாதர்’ ஆகிய படங்களில் நடிக்கும் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். அவர்கள் திருமணம் திருப்பதி கோயில் அருகிலுள்ள ஒரு மடத்தில் நடக்கிறது. இந்நிலையில், இரண்டாவது பாலிவுட் படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சல்மான்கான் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,284,280 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,284,2800 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 519,619,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 474,380,820 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,270 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.