இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து

கொழும்பு: இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார் . நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்றுள்ளீர்கள் நாட்டை சிறப்பாக வழி நடத்த வாழ்த்துக்கள் என்று மகிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 7.79%-ஆக அதிகரிப்பு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79%-ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்தது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து 7.79% ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம்

சென்னை: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15-ம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மே 15-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது

கர்நாடகாவில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்தியது அம்மாநில அரசு

பெங்களூரு: கர்நாடகாவில்  மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கர்நாடக மாநில அரசு கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றியது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவதில்லை என கூறியிருந்தது. மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், … Read more

எட்டுமனூர் – கோட்டயம் – சிங்காவனம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக 22 கேரள ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எட்டுமனூர் – கோட்டயம் – சிங்காவனம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக 22 கேரள ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பராமரிப்புப் பணி காரணமாக மங்களூரு – நாகர்கோவில் பரசுராம் விரைவு ரயில் (16649) 20 முதல் 28 வரை ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவில் – மங்களூரு விரைவு ரயில் (16650) மே 21 முதல் 29 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களிலும் 57 உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்ட 6 எம்.,பி.,க்கள் … Read more

'விக்ரம்' படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்..!!

சென்னை: மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவிற்கு அரசு பஸ்சில் கடத்திய ரூ.56 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

பாலக்காடு: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு இன்ஸ்பெக்டர் னிவாசன் தலைமையில் கலால்துறை அதிகாரிகள் நேற்று பிபிஎல் சந்திப்பு சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் … Read more

அசானி புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அசானி புயல் எதிரொலியாக குமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மைசூரு நாட்டு வைத்தியர் கடத்திக் கொலை கைதான தொழிலதிபருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (60). நாட்டு வைத்தியர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூரு போலீசில் புகார் செய்திருந்தனர். இந்த நிலையில் வைத்தியர் ஷாபா செரீப்பை கேரள மாநிலம் நிலம்பூரை சேர்ந்த தொழிலதிபரான ஷைபின் அஷ்ரப் என்பவரின் தலைமையிலான கும்பல் கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. வைத்தியர் ஷாபா செரீபை ஷைபின் அஷ்ரப் மைசூருவில் இருந்து கடத்தி தனது வீட்டில் … Read more