இலங்கையில் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என சஜித் பிரேமதசா தெரிவித்தார். 4 நிபந்தனைகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்கத் தயார் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தார்.  

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10ல் மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களிலும் 57 உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல்..!!

சென்னை: இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிவாரணப் பொருள் கப்பலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.123 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.15 கோடி பால் பவுடர், மருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு தொடர நீதிமன்றம் அனுமதி

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. மசூதிக்குள் ஏற்கெனவே இந்து கடவுள் சிலைகளை வைத்து வழிபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் இந்து அமைப்புகளுக்கு சாதகமாக செயல்படுவதாக மசூதி நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். 

தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 24-ம் தேதி 12 மீனவர்களும் கைதாகினர். 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என அண்மையில் நீதிபதி கூறியது சர்ச்சையானது.  தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் ராமேஸ்வரம் … Read more

பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்திற்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்.!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது … Read more

தருமபுரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குரும்பட்டியில் 20 வயது இளைஞர் வெங்கடேஷ் கடந்த 7ம் தேதி எலி மறுத்து சாப்பிட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகினார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது பெற்றோருக்கு தெரிய வந்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றறிக்கையை திரும்பப்பெற கோரி ஜிப்மருக்குள் நுழைய முயன்றபோது தடுத்ததால் போலீசாருக்கும்- விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.