சிவகாசி அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான்கள் சாவு

சிவகாசி: சிவகாசி பாறைப்பட்டி போலீஸ் செக் போஸ்ட் அருகே மாநகராட்சி 33வது வார்டு பிஜேபி கவுன்சிலர் குமரிபாஸ்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று 2 புள்ளி மான்கள் சுற்றி திரிந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் விரட்டி சென்று மான்களை கடித்துள்ளது. இதில் 2 மான்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தன . வனத்துறை அலுவலர்களுக்கு சிவகாசி கிழக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் மான்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து

தெலங்கானா: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இறைவனின் அருளால், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலித்து கையாடல்!: மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதல்வர் இடமாற்றம்..!!

மதுரை: மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதல்வர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவ, மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் முதல்வர் ரவி மாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் ரவியை மாற்றி மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொன்.முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார்.

சுகாதார கட்டமைப்பின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்: காங். எம்.பி. ராகுல்காந்தி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சுகாதார கட்டமைப்பின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன். செவிலியர்களின் அர்ப்பணிப்புக்கும், கடின உழைப்புக்கும் அவர்களுடைய தன்னலமில்லா சேவைகளுக்கும் நன்றி என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய பட்டணப்பிரவேச பெருவிழா

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசம் வரும் 22-ம் தேதி இரவு நடைபெறுகிறது. 

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது.! டெல்லி காவல்துறை அதிரடி

டெல்லி: பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது.இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய … Read more

கோவை அருகே மர்ம விலங்கு கடித்துக் 4 ஆடுகள் பலி

கோவை: அன்னூர் அருகே 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றதால் மக்கள் பீதிந்துள்ளனர். ஒட்டர்பாளையத்தை சேர்ந்த சச்சின், நூர் முகமது ஆகியோர் வளர்த்து வந்த 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

கடலூர் அருகே பெரிய குப்பத்தில் போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 4 பேரிடம் போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் அருகே பெரிய குப்பத்தில் போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 4பேரை பிடித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிய குப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று கொள்ளை முயற்சி நடந்தது. கொள்ளையை தடுக்க முயன்றபோது போலீஸ், ஆலை காவலாளிகள் மீது கொள்ளை கும்பல் பெட்ரோல் குண்டுவீசியது

மே-12: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,281,810 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,281,810 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 518,978,441 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 473,771,303 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,270 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.