பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்,’ என பேரறிவாளன் விடுதலை வழக்கில் அதிரடியாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ‘ஒன்றிய புலனாய்வு … Read more

தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிய வழக்குகளை பதிவு செய்யக் கூடாது,’ என்று ஒன்றிய,  மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு, தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி ஏராளமான பொதுநல அமைப்புகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை நேற்று முன்தினம் விசாரணைக்கு … Read more

ஆந்திராவில் அசானி புயலால் கடலில் அடித்து வரப்பட்ட வெளிநாட்டு தங்க நிற தேர்: உளவுத்துறை விசாரணை

திருமலை: ஆந்திராவில் அசானி புயலால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட தங்க நிறத்திலான தேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமானில் ஏற்பட்ட   குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக்கடலில்  அதிதீவிர அசானி புயலாக மாறி ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடந்து வருகிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று கரையை கடக்கும் என்றும், இதனால் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், காகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் தங்க … Read more

பிரதமர் அமித்ஷா அவர்களே… அமைச்சர் மோடி அவர்களே: பதவியை மாற்றிய அசாம் முதல்வர்

கவுகாத்தி: அமித்ஷாவை பிரதமர் என்றும், மோடியை உள்துறை அமைச்சர் என்றும்  அசாம் முதல்வர் தவறுதலாக குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் முதல்வராக  ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி கவுகாத்தியில் பாஜ பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘பிரதமர் அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஒத்துழைப்பு … Read more

கேரளாவில் பரபரப்பு; நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டு: தீவிரவாதிகள் கொண்டு வந்ததா?

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி  ஏராளமான காலியிடங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு இடத்தை அளப்பதற்காக  உரிமையாளர் சென்று உள்ளார். அப்போது அருகில் உள்ள இடத்தில் ஒரு அட்டை  பெட்டி கிடந்தது. அதை திறந்து பார்த்தார். அதில் ஏராளமான துப்பாக்கி  குண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து  கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி விசாரித்தனர்.  மொத்தம் … Read more

ஐநா.வில் இந்தி மொழி பெயர்ப்புக்கு ரூ.6 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி:  ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் உள்ள இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்லும் நடவடிக்கை, கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஐநா சபையில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒன்றிய அரசு ₹6.16 கோடி நிதியை தற்போது வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஐநா.வின் உலகளாவிய தகவல் தொடர்பு துறையின், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு துணை இயக்குநரும் பொறுப்பு அதிகாரியுமான மிட்டா கோசலிடம் ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்த … Read more

வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கார்டு, ஆதார் கட்டாயம்

புதுடெல்லி: ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் பான் எண், ஆதார் எண்  கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம்  வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நிதியாண்டில் வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ அல்லது நடப்புக் கணக்கைத் தொடங்கவோ, நிரந்தர கணக்கு எண்  அல்லது பயோமெட்ரிக் ஆதாரை வழங்குவது  கட்டாயம்,’ என கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஏகேஎம் … Read more

கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு

சென்னை: கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

சாலை சீரமைப்பில் பல கோடி முறைகேடு சந்திரபாபு மீது சிஐடி வழக்கு; ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர்கள் மீது சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.ஆந்திர முதல்வராக சந்திரபாபு இருந்தபோது அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆலராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் புகார் அளித்தார். அதன் பேரில் சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் நாராயணா … Read more

ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ராஜஸ்தான் அணி

மும்பை: டெல்லி அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்களை குவித்தது. இதையடுத்து டெல்லி அணி களமிறங்க உள்ளது.