தேச துரோக வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

டெல்லி: தேச துரோக வழக்கு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன்: கோட்டாபய ராஜபக்ச பேச்சு

இலங்கை: ஒரு  வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று  கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்ள தயாராக இருப்பதாக கோத்தபய அறிவித்தார்

ஜம்மு – காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பொதுமக்களில் ஒருவர் பலி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவரும் உயிரிழந்தார். இந்த மோதலில் ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜி விஜய் குமார் கூறுகையில், ‘சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியை சுற்றிவளைத்த போது, ​​மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து … Read more

தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகல்

மும்பை: தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இந்த அறிவிப்பை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச  நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச்  சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு … Read more

வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்: காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்க அறிவுறுத்தல்

டெல்லி: கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம்  என கூறியுள்ளது. விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என கூறியுள்ளது. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. … Read more

இலங்கையில் இன்றிரவு முதல் கடுமையாக்கப்படும் ஊரடங்கு: காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை: இலங்கையில்  இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது, வன்முறையிலோ அல்லது விதிகளில் குளுக்ககாக ஒன்றுகூட வேண்டாம் என இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது வன்முறையில் ஈடுபட்டால் சுட்டுத்தள்ள காவல்துறை  உத்தரவிடபட்டுள்ளது

முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைத்து மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. மேலும், கலந்தாய்வுக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு, கூடுதல் இடங்களை ஒதுக்குவது தொடா்பாக எழுந்த பிரச்னைகள் காரணமாக மாணவா்கள் பலா், நடப்பாண்டுக்கான நுழைவுத்தோ்வுக்கு … Read more

நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்

நெய்வேலி: என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய உள்ளூர் நபர்களுக்கு அந்நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.