கல்குவாரி ஒப்பந்த விவகாரம் தாய்க்கு உடம்பு சரியில்லை 30 நாள் அவகாசம் கொடுங்க!: தேர்தல் கமிஷனுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் பதில்

ராஞ்சி: கல்குவாரி ஒப்பந்த விவகாரத்தில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு மேலும் 30 நாட்கள் அவகாசம் ேகட்டு கடிதம் எழுதியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக,  முதல்வர் ஹேமந்த் சோரன் மீது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல … Read more

கரூர் மாவட்டத்தில் 6 வட்டாசியர்கள் பணியிட மற்றம் ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு

கரூர்: கருர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்களை பணியிட மற்றம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார், கரூர் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக இருந்த முருகன் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக மாற்றம் செய்துள்ளார், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக இருந்த யசோதா தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளராக மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார் 

பேரறிவாளனை விடுவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: பேரறிவாளனை விடுவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அசானி புயல் எதிரொலியால் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அசானி புயல் எதிரொலியால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது , சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தேனீ ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன்: வழக்கறிஞர் பிரபு பேட்டி

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன் என வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய … Read more

சர்வேதச தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யராஜ்ஜி

சைப்ரஸ்:சைப்ரஸில் நடைபெற்ற சர்வேதச தடகள போட்டியில் 100 மீட்டர் தடைத்தாண்டும்  ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி யாரஜி. 100 மீட்டர் தடை ஓட்டத்தில் 20 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்துள்ளார் ஜோதி யாரஜி. பந்தய தூரத்தை 13.23 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை  தட்டிக் சென்றார் இந்திய வீராங்கனை

ஒப்புக் கொண்ட நடன நிகழ்ச்சிக்கு வராததால் மோசடி வழக்கில் சிக்கிய நடிகை கோர்ட்டில் ஆஜர்: கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பரபரப்பு

லக்னோ: ஒப்புக் கொண்ட நடன நிகழ்ச்சிக்கு வராததால் மோசடி வழக்கில் சிக்கிய நடிகை சப்னா சவுத்ரி, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் உத்தரபிரதேச கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஆஷியானா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி உப்வானில் ‘தாண்டியா நைட்ஸ் வித் சப்னா சவுத்ரி’யின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரூ.2,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால் நடிகையும், பாடகியும், … Read more

அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை சோதனை: கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

புதுக்கோட்டை: புதுகோட்டையில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்யப்பட்டனர் , உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன்?.. ஆளுநரின் மன்னிப்புகள் அரசியலமைப்புக்கு எதிரானதா?.. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் விரிவான அறிக்கையாக ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையிலும் நாங்களே இறுதி … Read more

பள்ளிக்கு அருகே டாஸ்மாக்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோவை: பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்த  வழக்கில் கோவை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம், ரமேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்