மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் காங். மாஜி ஒன்றிய அமைச்சர் மரணம்

புதுடெல்லி: மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பண்டிட் சுக்ராம் மரணம் அடைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பண்டிட் சுக்ராம் (95), கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பண்டிட் சுக்ராம் இறந்ததாக செய்தி பரவியது. … Read more

ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை ‘ஆல்கஹால்’ சோதனையில் சிக்கிய 9 விமானிகள்: போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ‘ஆல்கஹால்’ சோதனையில் 9 விமானிகள் சிக்கினர். இவர்களில் போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இண்டிகோ விமான நிறுவனத்தின் நான்கு விமானிகள் மற்றும் 10 கேபின்-குழு பணியாளர்கள், கோ-பர்ஸ்ட் விமான நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் ஐந்து கேபின் குழு பணியாளர்கள், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் ஒரு பைலட் மற்றும் 6 கேபின் குழு பணியாளர்கள், ஏர்-இந்தியா … Read more

ஓராண்டு கால ஆட்சி என்பது எனக்கு அதிக மனநிறைவை அளித்துள்ளது.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஓராண்டு கால ஆட்சி என்பது எனக்கு அதிக மனநிறைவை அளித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செல்லவேண்டிய தூரம் அதிகம், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி பாஜவினர் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் : 10ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்று பாஜவினர் கூறின்ர்.சித்தூரில் உள்ள மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன் பாஜவினர் 10ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியானதை கண்டித்தும், தனியார் பள்ளி உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜ மாவட்ட தலைவர் சிவகுமார் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறதா என புரியாத புதிராக உள்ளது. ஜெகன்மோகன் ஆட்சியில் … Read more

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில்ஒருவரை கைது செய்தது சிபிஐ

கோவை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில் வாகேஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் சிவனம்பதியைச் சேர்ந்த வாகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டெல்லி, சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

'இந்தி பட உலகத்தால் எனக்கு போதிய சம்பளம் கொடுக்க முடியாது'!: இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு பேட்டி..!!

டெல்லி: இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கூறியிருப்பது திரைத்துறையில் மீண்டும் மொழி குறித்த விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்தி மொழி திணிப்பு குறித்து இந்தி நடிகர்களுக்கும், பிற மொழி நடிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நடிகர் மகேஷ்பாபு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு நடித்த ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி பட … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகநூலில் விமர்சித்தவரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகநூலில் விமர்சித்தவரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆரணி போலீசின் கடும் ஆட்சேபத்தை அடுத்து செந்தில்குமார் என்பவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் எனவே ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை 124(A) ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது பதில் … Read more

இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்பது: இந்திய தூதரகம் டிவிட்டரில் திட்டவட்டம்

கொழும்பு: இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்ப உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் கலவரமாக வெடித்தது. தமிழ்நாட்டுக்குள் தேசவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக ஒன்றிய உள்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.