இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?.. உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரம்

டெல்லி: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. அன்று ராணுவ மற்றும் அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்சே குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுமழை… ரத்த வெள்ளத்தில் சடலங்கள்… மரண ஓலங்கள்… சரணடைய … Read more

இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்டோர் வீடுகளில் டீசல், சிலிண்டர், உரம், பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நிகழும் கலவரம் குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு

கொழும்பு: இலங்கையில் நிகழும் கலவரத்திற்கு காரணமான கொழும்பு வன்முறை குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்தா உள்பட சந்தேகிக்கப்படும் நபர்கள் என 20 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத் தளபதி, காவல்துறை தலைவர் ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவு

கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாகசென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது.

ராணுவத்துக்கு எதிராக போரிட ஆட்கள் தேர்வு 10 குற்றவாளிகளுக்கு விதித்த ஆயுள் தண்டனை அதிகரிப்பு: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட ஆட்களை தேர்வு செய்து அனுப்பிய வழக்கில்  கேரளாவை சேர்ந்த 10 பேரின் தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு,  அக்டோபர் மாதம் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, பலரை கொன்றது. இந்த தீவிரவாதிகளில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கு … Read more

புயலாக வலுவிழந்தது அசானி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்க கடலில் நிலை கொண்டிருந்த அசானி தீவிர புயலானது, புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்ராம் காலமானார்

டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்ராம் (94) உடல்நலக்குறைவால் காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மே-11: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.