தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்கு போடுவதை நிறுத்தி வைக்க முடியுமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: ‘தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றால், அதுவரையில் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா?’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் சட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய ஒன்றிய அரசு, பின்னர் … Read more