இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பல்டி: நீதிபதிகள் 3 மாதம் கெடு

புதுடெல்லி: நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய முழு அதிகாரமும் மாநிலங்களுக்கு கிடையாது. இதுதொடர்பாக புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்,’’ என்றார்.இதைக் கேட்ட … Read more

ஐபிஎல் 2022: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

புனே: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து லக்னோ அணி களமிறங்க உள்ளது.

நாக்பூர் ரயில் நிலையத்தில் மர்ம பையில் வெடிபொருள் : உடனடி நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பையில் வெடிபொருள் இருந்ததால், அங்கு நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. தகவல் கிடைத்ததும், ஜிஆர்பி மற்றும் ஐபிஎஃப் படையினர் அந்த பகுதிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் 54 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நாக்பூரின் … Read more

சிறுமியை ஏமாற்றி திருமணம் – 13 ஆண்டுகள் சிறை

சென்னை: 13 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் இளைஞர் அஜித்குமார் (25) என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது  , கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார், இளைஞர்  அஜித்குமாருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 8000 அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது

மோடி, சவுகான் படங்கள் முன் பெண் ஆடிய ஆபாச நடனத்தால் நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்

போபால்: மந்த்தூரில் மோடி, சவுகான் படங்கள் முன்பாக பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியதால், நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம் ஷாம்கரில், மகிஷாசுர மர்தினி தேவி கண்காட்சி நடைபெற்று வருகிறது. விழா மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அமைச்சரின் படங்கள் இருந்தன. அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சியில் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, உடனடியாக … Read more

இலங்கையில் வன்முறை: 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததது காவல்துறை. அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதிவு விலகி வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது 

டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவருடன் பிரதமர் சந்திப்பு

டெல்லி: டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு  ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு  பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்  வழங்கப்பட்டது. அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாறியத்தற்காக  மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம்  வழங்கப்ட்டது.   

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி

புனே: லக்னோ அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ரன்களை குவித்தது. இதையடுத்து லக்னோ அணி களமிறங்க உள்ளது.

சொகுசு வாழ்க்கை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக 6 ஆண்டில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறப்பு: வெளிநாட்டில் செட்டில் ஆவதில் மக்கள் ஆர்வம்

புதுடெல்லி: சொகுசு வாழ்க்கையை தேடியும், வேலையில்லா திண்டாட்டம் காரணமாக கடந்த 6 ஆண்டில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டு குடியுரிமையை பெற்று அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வசிக்கும் செல்வந்தர்கள் பலர் தங்களது இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடு சென்றுவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தொழிலில் பாதுகாப்பின்மை, சொகுசான வாழ்க்கைத் தரத்தைத் தேடியும்  வெளிநாடு சென்றுள்ளனர். படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களில் 70 முதல் 80 சதவீதம் … Read more

பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் வன்முறை: இலங்கையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்

பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் கலவரம் இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  4 பேர் காயமடைந்துள்ளனர் ,இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.