கடந்த 2 ஆண்டுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடக்கும் திருச்சூர் பூரம் திருவிழா

பாலக்காடு: கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இன்று கணிமங்கலம் சாஸ்தா கோயில் உற்சவர் யானை மீது ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் அதிர விழா துவங்கியது. இன்று மதியம் 12.30 மணிக்கு பாறமேற்காவு கோயில் திருவீதியுலா செண்டைவாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு வடக்குநாதர் கோயில் வளாகத்தில் கிழக்கூட்டு அனியன்மாரார் தலைமையில் திருவம்பாடி பாண்டிமேளம் நடக்க உள்ளது. இதையடுத்து … Read more

அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு: பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கை: இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது முப்படைகளும் துப்பாக்கிச்சூடு நடத்த பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது . இலங்கையில் காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

அமித்ஷா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் ராஜ்யசபா எம்பி ஆகிறார் கங்குலியின் மனைவி?: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா, ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட இரு ராஜ்யசபா உறுப்பினர்களான நடிகை ரூபா கங்குலி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கான பிரபலங்கள் யார்? என்ற விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் … Read more

மக்கள் அனுமதி காக்க வேண்டும்: இலங்கை அதிபர்

இலங்கை: வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அதிபர் கூறியுள்ளார்.பொருளாதார நெருக்கடியை தீர்க்க அணைத்து முற்சிகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை நாடுமுழுவதும் பரவியதை அடுத்து அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

ரூ.1,710 கோடியில் கட்டப்படும் பாலம் இடிந்தது ஐஏஎஸ் அதிகாரி இப்படி சொல்லலாமா?: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

பாட்னா: பீகாரில் ரூ.1,710 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததற்கு காற்றும், மூடுபனியும் காரணம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதற்கு, அமைச்சர் நிதின் கட்கரி வேதனை அடைந்தார். பீகார் மாநிலம் சுல்தங்கஞ்ச் மற்றும் அகுமானி காட் இடையே கங்கை நதியின் மேல் பாலம் கட்டும் பணி 2014ல் துவங்கியது. ரூ.  1,710 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், கடந்த ஏப்ரல் 29ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையால் பாலத்தின் … Read more

இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்

டெல்லி: இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ தளபதிக்கு ஜனாதிபதி ராம்நாத் பதக்கம் வழங்கினார். அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.  

ஹீரோவாக நடிக்கும் சதீஷ்

ஹீரோவாக நடிக்கும் சதீஷ் 5/10/2022 3:54:21 PM காமெடியனாக இருந்த சதீஷ் தற்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கி உள்ளார். நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது மீண்டும் இன்னும் டைட்டில் வைக்கபடாத படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மோனிகா சின்னகொட்லா நடிக்கிறார். பாலாஜி மோகனின் உதவியாளர் பிரவீண் சரவணன் இயக்குகிறார். விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கின்றார். ரவி இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

காந்திநகர்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தற்போதே காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தஹோத் மாவட்டத்தில் ’சத்தியாகிரக பழங்குடியின பேரணியை’ தொடங்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வைத்தார். பின்னர் பேசிய அவர்; பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் சாலை, பாலம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை குஜராத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியையோ, … Read more

கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்: உகாண்டா நாட்டு பெண் கைது

கோவை: கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த சாண்ட்ரா நண்டேஜா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தொடங்கியது

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தொடங்கியது 5/10/2022 3:55:39 PM விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’யை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ். வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் . ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் … Read more