மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் குடிபோதையில் துணை முதல்வர் மகன் விமான நிலையத்தில் ரகளை..!!

காந்திநகர்: மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் குடிபோதையில் துணை முதல்வர் மகன் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் இருந்ததால் குஜராத் துணை முதல்வர் நிதின் படேலின் மகன் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. கத்தார் செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்துக்கு ஜெய்மின் படேல் குடும்பத்துடன் வந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காஞ்சிபுரம், தி.மலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை: வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டது. மீதி உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் … Read more

கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஓடப்பட்டி பூபாலன் உள்ளிட்ட 8 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அவர் விளக்கமளித்தார்.    

இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது பற்றி ஆலோசிக்க விரும்பினால் செய்ய வேண்டியதுதானே?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது பற்றி ஆலோசிக்க விரும்பினால் செய்ய வேண்டியதுதானே? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலங்களவை இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவுக்கு வர மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழே விழுந்து கிடந்த விளம்பர பிளக்ஸ் போர்டை தூக்கும் போது 3 பெயிண்டர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஆக்கிரமிப்பை அகற்ற காலம் அவகாசம் வழங்கினால் அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் கடைபிடிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.  

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம்..!!

மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் என்பது உள்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.  

திருப்பத்தூர் அருகே வீட்டின் மீது மரம் விழுந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வீட்டின் மீது மரம் விழுந்து 5 வயது குழந்தை தேவிகா உயிரிழந்தது. காற்றுடன் பெய்த மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது.