இலங்கை அரசு மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே

கொழும்பு: பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இலங்கை அரசு மாளிகையை விட்டுமகிந்த ராஜபக்சே வெளியேறினார். அரசு மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை ராணுவம் அப்புறப்படுத்தியது.

சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: புதிய தகவல்கள்

சென்னை: உள்ளூர்வாசிகளை நம்பாத ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று வர கிருஷ்ணாவுக்கு மட்டுமே ஆடிட்டர் அனுமதி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 2,288 பேருக்கு கொரோனா..3,044பேர் குணமடைந்தனர்.. 10 பேர் பலி !!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,288 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,07,689-ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எந்த இடத்திலாவது மின்தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாகவே இருக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இன்றிரவு கரையை கடக்கும் அசானி; 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி புயல் … Read more

சென்னை உள்பட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா

திருவனந்தபுரம்: கேரளாவில்  மீண்டும் ஷிகெல்லா வைரஸ் பரவுகிறது. மலப்புரம் மாவட்டத்தில் இந்த நோய்  பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசுத்தமான  தண்ணீர் மற்றும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா  பரவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் 6 பேருக்கு  ஷிகெல்லா பரவியது. பின்னர் இந்த நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த  சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்த  தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,277,561 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,277,561 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 517,586,897 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 472,366,026 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,668 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கி விவகாரம் மத வேறுபாடின்றி கடும் நடவடிக்கை: முதல்வர் பொம்மை உத்தரவு

பெங்களூரு: மசூதி , சர்ச் மற்றும் இந்து கோயில்களில் ஒலி பெருக்கி பயன்படுத்தும் போது விதிகளை கடைபிடிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த நேரங்களில் எவ்வளவு டெசிபில் ஒலி எழுப்பப்பட வேண்டும் என்பதற்கான விதிகளையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் வரையறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராம சேனை அமைப்பினர் மசூதி மற்றும் சர்ச் ஆகியவற்றில் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்யவேண்டும் என்றும் இதற்கு மே 9 வரை கால அவகாசம் வழங்கினர். இந்நிலையில் நேற்று மாநிலம் … Read more

மே-10: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.