இறுதிச்சடங்கிற்கு சென்று திரும்பியபோது வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி: 16 பேர் படுகாயம்

திருமலை: தெலங்கானாவில் சரக்கு வேன்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சில்லர்கி கிராமத்தை சேர்ந்தவர் சவுதர்பள்ளி மாணிக்கம். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். இதையொட்டி அவரது உறவினர்கள் சுமார் 25 பேர் நேற்று முன்தினம் 3ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுவிட்டு, அதன்பிறகு அனைவரும் மீண்டும் ஊர் திரும்பினர். … Read more

‘ஷாஹீன் பாக்’ ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு  உட்பட்ட ஜஹாங்கீர்புரியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து,  அங்குள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி  நிர்வாகம் அகற்றியது. தற்போது இவ்விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில்  உள்ளது. இந்நிலையில், டெல்லியின் ஷாஹீன் பாக் (சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடந்த இடம்) பகுதியில் உள்ள சாலைகள்  மற்றும் அரசு நிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை கடந்த 5ம்  தேதி அகற்ற ெதற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டது. … Read more

உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பதவியேற்பு

புதுடெல்லி: அசாம் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ துலியா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்ஷெட் பர்திவாலா  ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று  இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, ஜாம்ஷெட் பர்திவாலா ஆகியோர்  நேற்று பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா … Read more

தேச துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்கிறோம்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: தேசத்துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் … Read more

குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதால் சிறுமியை மணந்த வாலிபரின் போக்சோ தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது சொந்த அக்கா மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி 15 வயதிலும், 17 வயதிலும்  குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது, தண்டபாணி மீது காவல்துறையால் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தண்டபாணி அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் தண்டபாணிக்கு கீழமை நீதிமன்றம் … Read more

விசுவாசத்தை காட்டுங்கள்: சோனியா அழைப்பு

புதுடெல்லி: ‘கட்சிக்கு விஸ்வாசத்தை காட்டும் நேரம் இது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், நாடு முழுவதும் இருந்து சுமார் 400 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெறலாம்: மேலாண் இருக்குநர்

சென்னை: அரசுப் பேருந்துகளில் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அறைக்கட்டணம் வசூலிக்கப்படும் என மேலாண் இருக்குநர் அறிவித்துள்ளார் 

வரலாறு காணாத வீழ்ச்சி இந்திய ரூபாய் ஐசியூவில் உள்ளது: காங்கிரஸ் விமர்சனம்

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது வரலாறு காணாத வகையில் நேற்று வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து ரூ.77.41 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக் … Read more

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 வழக்கறிஞர்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பல்வேறு குற்றசாட்டுக்களுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற  பார்கவுன்சில் தடை விதிக்கபட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் 3 பேர் உட்பட 19  வழக்கறிஞர்கள்  நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வழக்கு: உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை

புதுடெல்லி:  நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாகக் கூறி, அதை தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த விதிமுறைகள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இது … Read more