குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 

உடலில் மின்சாரம் பாய்ச்சி வயதான தம்பதி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (71). முன்னாள் பிஎஸ்என்எல் ஊழியர். அவரது மனைவி சியாமளா (62). இந்த தம்பதிக்கு பாக்யா என்ற ஒரு மகள் உண்டு. அவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் ஹரிதாஸ், சியாமளா ஆகியோர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து … Read more

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது கொல்கத்தா அணி

மும்பை: மும்பை அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165  ரன்களை குவித்தது. இயைடுத்து மும்பை அணி தற்போது களமிறங்க உள்ளது.

நூல் விலை உயர்வை கவனத்தில் கொள்வேன்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நூல் விலை உயர்வு பற்றாக்குறையை நான் கவனத்தில் கொள்வேன் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார், தீர்வை கொடுக்கும்போது மற்றொரு துறை பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு: UGC உத்தரவு

சென்னை: M.Phil, Ph.D மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க, ஜூலை, டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது , ஜூன் 30ம் தேதிக்குப் பின் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள்  விரும்பினால் கூடுதலாக 6 மாதங்கள் வழங்கலாம்  என்று UGC உத்தரவு: நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக அவகாசத்தை நீட்டித்து UGC உத்தரவிடப்பட்டுள்ளது

கேரளாவில் ஷிகெல்லா பரவுகிறது : 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பரவுகிறது. நேற்று மலப்புரம் மாவட்டத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசுத்தமான தண்ணீர் மற்றும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். கேரளாவில் கடந்த சில வருடங்களாக கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் 6 … Read more

மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு: கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்

இலங்கை: இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4-வது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சிதனர், ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ்  

நடிகை பலாத்கார வழக்கு காவ்யா மாதவனுக்கு மீண்டும் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் தற்போது தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே … Read more

கோவில் திருவிழாக்களில் கட்டுப்பாடுகள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்து இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 130 டாலர் வரை உயர்ந்தது. அதிகமான விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. போர் சூழல் காரணமாக விநியோகத் தொடர்பு பாதிக்கப்பட்டு, வர்த்தகம் சீர்குலைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், … Read more