உதவி கோட்ட பொறியாளரிடம் ரூ 3.50 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சேலம்: ஆத்தூர் நெடுசாலையில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர், உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ 3.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனர் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

பேரவை வளாகத்தில் ‘காலிஸ்தான்’ கொடி ஒட்டிய விவகாரம் : இமாச்சலின் 5 மாநில எல்லைகளுக்கு ‘சீல்’

* உளவுத்துறை எச்சரிக்கையை கோட்டை விட்ட பாஜக அரசுசண்டிகர்: தர்மசாலாவில் உள்ள இமாச்சல் சட்டப் பேரவை வளாகத்தில் ‘காலிஸ்தான்’ கொடி ஒட்டிய விவகாரத்தால், இமாச்சலின் 5 மாநில எல்லைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையை கோட்டை விட்ட பாஜக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர்கள் தர்மசாலாவில் உள்ள மாநில சட்டப்பேரவை அரங்கில் நடைபெறும். இதர நேரங்களில் சிம்லாவில் கூட்டத்தொடர்கள் நடைபெறும். இந்நிலையில் தர்மசாலா பேரவை … Read more

ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதாவின் கம்பெனியில் என்ஐஏ ரெய்டு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதாவின் மும்பை டி-கம்பெனியில் தேசிய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தி வருகிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான டி-கம்பெனி மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியின் ரியல் எஸ்டேட் மேலாளர் மீதான ஹவாலா மோசடி தொடர்பான புகாரை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. மும்பையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. அதாவது போரிவாலி, சாண்டாக்ரூஸ், பாந்த்ரா, … Read more

ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு: இலங்கையில் பரபரப்பு

இலங்கை : கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்தனர் . சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். ராஜபக்சே ஆதரவு குண்டர்களை மரத்தில் கட்டிவைத்து போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ரூ 2000 அளிப்பதாக கூறி அழைத்து வந்ததாக பிடிபட்ட குண்டர்கள் வாக்குமூலம் அளித்துயுள்ளனர்.  

காரை மோதவிட்டு நடிகைக்கு பலாத்கார மிரட்டல்

மும்பை: மர்ம நபர் ஒருவர் தனது காரை மோதவிட்டு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாக நடிகை மஹி விஜ் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான மஹி விஜ் (40), சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒருவரிடமிருந்து எனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்தது. அவர் எனது கார் மீது அவரது காரை மோதவிட்டு தவறாக நடந்துகொண்டார். சம்பவம் நடந்தபோது எனது மகள் தாராவும் காரில் இருந்தார். எனது குடும்பத்தை அச்சுறுத்தும் … Read more

இலங்கை கலவரம்… ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கை கலவரத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளார். போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில்  ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் இறந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அட்டூழியம் ‘லிப்ட்’ கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள்: போக்சோ சட்டத்தில் கைது

அலிகார்: உத்தரபிரதேசத்தில் நடந்து சென்ற சிறுமியை பைக்கில் அழைத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 49 வயது மதிக்கத்தக்க போலீஸ் கான்ஸ்டபிள், கடந்த சில நாட்களுக்கு முன் அலிகார் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றார். அவரிடம், வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி தனது … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,872-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,859-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66.50-க்கு விற்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்தார். சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா சாப்பிடத்தான் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இது போன்ற பாதிப்பு உள்ளதா … Read more