கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகினறனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் வந்தன: எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தம்..!

டெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று நாடே திரும்பி பார்த்த ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வடக்கு ஜஹாங்கீர் புரியில் இது போன்று ஆகிக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி புல்டோசர்கள் கொண்டு வரப்பட்ட போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று சம்பவ இடத்திற்கு பிருந்தா காரத் முறையிட்டார். அப்போது இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக ஆளும் வடக்கு டெல்லியில் மாநகர நிர்வாகம் … Read more

காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவல்துறைகளில் காலியிடங்களை நிரப்பி காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். காவல்துறையினருக்கு மின்னணு பொருட்கள் வாங்க வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

கோதுமை மாவின் சராசரி சில்லறை விற்பனை விலை அதிரடி உயர்வு; கடந்த ஆண்டைவிட 9.16% அதிகரிப்பு..!!

டெல்லி: அகில இந்திய அளவில் கோதுமை மாவின் மாதாந்திர சராசரி சில்லறை விற்பனை விலை 32 ரூபாய் 38 காசுகளாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2010ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டுக்கு வெளியே கோதுமை மாவிற்கான தேவை அதிகரித்திருப்பதும் ஆனால் உள்நாட்டில் அதன் உற்பத்தி மற்றும் இருப்பு அளவு வீழ்ச்சியடைந்திருப்பதுமே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. மாநில குடிமை பொருள் விநியோக துறைகள், ஒன்றிய நுகர்வோர் … Read more

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார். 

மும்பையில் ஹவாலா பேர்வழிகள், கடத்தல்காரர்கள் வீடுகளில் அதிரடி சோதனை!: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி கைது..!!

மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் சலீம் என்பவர் ஆவார். மும்பையில் தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் சில ஹவாலா மோசடி நபர்களின் வீடுகளில் நேற்று நள்ளிரவு முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். உள்துறை அமைச்சகம் எடுத்த ஆணையை தொடர்ந்து இந்த சோதனை … Read more

தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை.: காவல்துறை

சென்னை: தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

டெல்லி ஷாகீன்பாக்கில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: டெல்லி ஷாகீன்பாக்கில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில் நிறுத்தியுள்ளனர்.

கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.: சீமான் கோரிக்கை

சென்னை: கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் ஒன்றிய அரசை தேச விரோத அரசு என்று கூறியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்