புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இடைத்தேர்தல் நடக்கும் சம்பாவத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும், புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

2 நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து, உச்சநீதிமன்றம் மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை எட்டியது!!

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து உச்சநீதிமன்றம் மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நீதிபதிகள் யு.யு.லலிதா, கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வரராவ் அடங்கிய கொலிஜியம், கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. இதை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுக் … Read more

சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புதிய சாதனை

மும்பை: டி20போட்டியில் கேப்டனாக 6000 ரன்களை அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். இந்த சாதனையை முதலில் விராட் கோலி எட்டியிருந்தார்.

வலுவிழக்கிறது அசானி புயல் – வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தூத்துக்குடி: கயத்தார் அருகே மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். ஞானசிவசுப்பிரமணியன் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சூரியமணிக்கன் பகுதியை சேர்ந்த செல்லதுரை (55) உயிரிழந்தார்.

இந்தியாவில் ஒரே நாளில் 3,207 பேருக்கு கொரோனா…3,410 பேர் குணமடைந்தனர்..29 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,207 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,05,401 ஆக உயர்ந்தது.* புதிதாக 29 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை :எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

மகன் போட்டோவை வெளியிட்டு காஜல் அகர்வால் உருக்கமான பதிவு

மும்பை: இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர், காஜல் அகர்வால். கடந்த 2020ல் தனது காதலர் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு மும்பையிலுள்ள சொந்த வீட்டில் குடியேறிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அதற்கு நீல் என்று பெயரிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அன்னையர் தினத்தையொட்டி தனது மகனுடன் இருக்கும் முதல் போட்டோவை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், இதுகுறித்து தெரிவித்துள்ள உருக்கமான பதிவு: இனி வரும் காலங்களில் ஒரு … Read more