இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? : மகிந்த ராஜபக்சே இன்று அறிவிக்க வாய்ப்பு

கொழும்பு : இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானம் செய்துள்ளன. இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? பதவியில் நீடிப்பாரா? என்று இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்து, முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்திலும் சராசரி கருவுறுதல் விகிதம் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் அனைத்து முக்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களும் அவர்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1992-93ம் ஆண்டு முதல், நாட்டின் திட்டமிடலுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2015-16ல் 4வது ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2019-21 இடையே 2 ஆண்டுகளில் 5வது ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில், நாட்டின் மொத்த கருவுறுதல் … Read more

3 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பறக்கிறது ஜெட் ஏர்வேஸ்

புதுடெல்லி: ரூ.25 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த 2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டது.  தற்போது ஜெட் ஏர்வேசை ஜலான்- கல்ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்த நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளது. கடந்த 5ம் தேதி, தங்களது முதல் சோதனை ஓட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, ஒன்றிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 6ம் தேதி, அந்நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது.

மே-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஜனாதிபதி தேர்தலில் எம்பி.க்கள் வாக்கு மதிப்பு குறைகிறது: 708ல் இருந்து 700 ஆக வாய்ப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு எம்பி.யின் வாக்குமதிப்பு 708ல் இருந்து 700 ஆக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வரும் ஜூலையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சட்டபேரவை உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொருத்து, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,276,327 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.76 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,276,327 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 517,204,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 471,832,894 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,871 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை மீண்டும் அச்சுறுத்தும் காலிஸ்தான் கோஷம்: உள்ளூர் தாதா, கூலிப் படைகள் பேரம்; உளவுத்துறைகளிடம் சிக்கிய ஆதாரம்

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் ரகசியமாக கைகோர்த்து செயல்படுகின்றன. கடந்த காலங்களில் இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, அந்த அமைப்புகள் தற்போது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை துண்டாட துடிக்கும் இதுபோன்ற தீவிரவாத அமைப்புகள், அண்டை நாட்டில் மட்டுமல்ல. வடகிழக்கு மாநிலங்களில் இப்போதும் கூட உயிருடன் உள்ளன. ஆனால், ஒன்றிய, மாநில அரசு பாதுகாப்பு அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளால், அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாக … Read more

வாலிபரிடம் ரூ.3.17 கோடி ரொக்கம் பறிமுதல் இன்டர்நெட்டில் போதை பொருட்கள் விற்பனை

புதுடெல்லி: தெலங்கானாவில் உள்ள டோமல்குடா அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜெஆர் இன்பினிட்டி தனியார் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த சட்ட விரோத இணையதள மருந்தகம் மூலம் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு போதை மருந்துகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் இ-மெயில் மற்றும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரொட்டோ கால் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள … Read more

கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு, பலி குறித்த அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில்,* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.* மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் … Read more

திருப்பதியில் புதிய செயல் அதிகாரி பொறுப்பேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் புதிய செயல் அதிகாரியாக தர்மா ரெட்டி நேற்று பொறுப்பேற்றார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் சமீர் சர்மா நேற்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த ஜவகர் ரெட்டி முதல்வர் அலுவலகத்தின் முழு நேர தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,   திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரியாக இருந்த  தர்மா ரெட்டி செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக … Read more