சினிமா வரலாற்றில் முதல்முறை ஒரு சிபிஐ டைரி குறிப்பு 6ம் பாகம் உருவாகிறது

திருவனந்தபுரம்: சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தின் 6வது பாகம் உருவாகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கே.மது இயக்கத்தில் சேதுராம அய்யர் கேரக்டரில் மம்முட்டி நடித்த படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. இது 1988ல் வெளியானது. எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து மம்முட்டியின் சேதுராம அய்யர் கேரக்டரை உருவாக்கப்பட்டது. கொச்சின் மட்டாஞ்சேரியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராதா வினோத் ராஜு, ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்தவர். கடந்த 1989ல் … Read more

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் விஜய் பாபுவுக்கு கோர்ட் கைது வாரன்ட்

திருவனந்தபுரம்: தலைமறைவாக இருக்கும் மலையாள நடிகர் விஜய் பாபுவுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. மலையாள இளம் நடிகை பலாத்கார வழக்கில் கொச்சி போலீசார் தேடி வரும் மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அவர் துபாயில் இருக்கலாம் என்று கொச்சி போலீசார் கருதுகின்றனர். விசாரணைக்கு உடனே ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் பலமுறை இமெயில் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சர்வதேச … Read more

திருமலையில் வரும் 25ம் தேதி முதல் அனுமன் பிறந்த இடத்தில் 5 நாட்கள் ஜெயந்தி விழா

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அனுமன் ஜெயந்தி ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருமலையில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமன் ஜெயந்தி பெருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருமலை அடுத்த அஞ்சனாத்திரியில் உள்ள ஆகாச கங்கையில், அனுமன் பிறந்த இடமான ஜபாலி தீர்த்தம், நாதநீராஞ்சனம், எஸ்.வி.வேதப்பள்ளி ஆகிய இடங்களில் பல்வேறு … Read more

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது: ராகுல் காந்தி பேச்சு

ஐதராபாத்; தெலங்கானா மாநிலத்தில் 2024-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்களை அழைக்கிறேன். தெலுங்கானா மக்கள் மற்றும் சோனியாவின் கனவுகளை சந்திரசேகர ராவ் என்ற தனி நபர் மட்டுமே அழித்து விட்டார். 2014-ல் … Read more

மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் தர கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களை நல்ல முறையில் படிக்க பெற்றோர் வழிவகை செய்ய வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்கள் நன்மைக்காகவே ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தொழில்நுட்பங்களில் சிக்காமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு, உக்ரைன் – ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

டெல்லி; கொரோனா பாதிப்பு, உக்ரைன் – ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னோக்கிதான் செல்ல உள்ளது எனவும் கூறினார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்களை மட்டும் எடுத்து ஆல் ஆனது.

டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அச்சுறுத்தல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையின் காரணமாக, அந்த தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டெல்லியில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்தாண்டு ஜனவரியில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே குறைந்த திறன் கொண்ட கையெறி குண்டுகள் … Read more

நண்பருக்கு தெரியாமல், ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமாக முயன்ற பெண் கைது

ஜெர்மனி: தனது நண்பருக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமாக முயன்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர். முதலில் Friends with Benefits-ஆக  இருந்தது, காலப்போக்கில் அந்த நபர் மீது காதல் அதிகமானதால் அவர் என்னை விட்டு செல்லக்கூடாது என்பதால் இவ்வாறு செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருக்கும் நடிகர் விஜய் பாபுவுக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம்: மலையாள இளம் நடிகை பலாத்கார வழக்கில் கொச்சி போலீசார் தேடிவரும் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவர் துபாயில் இருக்கலாம் என்று கொச்சி போலீசார் கருதுகின்றனர். விசாரணைக்கு உடனே ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் பல முறை இமெயில் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது … Read more