ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.

வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாஜக நிர்வாகி பக்காவை கைது செய்ய தடை: அரியானா ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பாஜக நிர்வாகி பக்காவை வரும் 10ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அரியானா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் வசிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர் தேஜிந்தர்பால் சிங் பக்காவை, அவதூறு கருத்துகளை  தெரிவித்ததாக பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். மொஹாலிக்கு அவரை அழைத்துச் சென்ற போது அரியானா போலீசார் பஞ்சாப் போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். டெல்லி போலீசார் பஞ்சாப் போலீசார் மீது … Read more

புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி அம்மாநில திமுக சார்பில் நாளை போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி அம்மாநில திமுக சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவிற்கு பாடுவதற்காக வரச்சொல்லி துப்பாக்கி முனையில் பாடகி கூட்டுப் பலாத்காரம்: 3 பேர் கும்பல் அதிரடி கைது; பீகாரில் அட்டூழியம்

பாட்னா: திருமண விழாவிற்கு பாடுவதற்காக வரச்சொல்லி, பாடகி ஒருவரை துப்பாக்கி முனையில் மூன்று பேர் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம், பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாடகியான 28 வயது இளம்பெண், திருமணம், பிறந்தநாள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வருவார். பல ஊர்களுக்கும் சென்று பாடல்களை பாடி வருவார். இந்நிலையில் பிந்து குமார், சஞ்சீவ் குமார், காரு குமார் என்ற மூன்று இளைஞர்கள், அந்த பாடகிக்கு செல்போனில் … Read more

இரட்டை கொலை தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் காவல், வருவாய்த்துறை முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. மாமல்லபுரம் அருகே பண்ணைவீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, ஸ்ரீகாந்தின் கழுத்தில் கத்திகுத்து காயம், அனுராதாவின் முகம் பலித்தின் பையால் மூடப்பட்டு இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிலும் தேர்வு: இஸ்ரோ பரிசீலனை:சு.வெங்கடேசன் டிவிட்டர்

பெங்களூர்: ஃபிட்டர், வெல்டர் தேர்வுகளில் தமிழ் கேள்வித்தாள் இல்லையே என்று இஸ்ரோ இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வழிகாட்டல் கேட்டுள்ளதாக இஸ்ரோ இயக்குநர் பதில் அனுப்பியுள்ளார் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார்

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி,காரைக்கால் , புதுச்சேரி  துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் அசானி புயல் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது

எல்லையில் ஊடுருவிய பாக். ‘ட்ரோன்’: 6 ரவுண்டு சுட்டதால் திரும்பியது

ஜம்மு: இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லாத விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்து வந்ததால், அதனை எல்லைப்பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். ஜம்முவில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானில்  இருந்து ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.  இதற்கு இந்திய ராணுவம் கடுமையான எதிர்வினையை ஆற்றி முறியடித்துள்ளது. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரின் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் பறந்தது. அதனை நோக்கி எல்லைப் பாதுகாப்பு … Read more

15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க 5 ஆண்டுக்கு ரூ 7000 கோடி நிதிமூலம் 15,000 வகுப்பறைகள் கட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார், முதற்கட்டமாக இவ்வருடம் ரூ 1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாராந்திர சேவைகள் ரத்து

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவுவரை 76 ஆயிரத்து 324 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38 ஆயிரத்து 710 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ4.73 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருந்து 6 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். … Read more