சென்னை மைலாப்பூரில் கொலை செய்து நெமிலிசேரியில் புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதியின் உடல் தோண்டி எடுப்பு

சென்னை: சென்னை மைலாப்பூரில்  கொலை செய்து நெமிலிசேரியில் புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதியின்  உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், தடவியல் துறை இயக்குனர், காவல் அதிகாரிகள் முன்னிலையில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது.    

குடும்ப பிரச்னை தீர்ப்பதாக கூறி கொடூரம்; சிறுமியை 3 மாதம் கூட்டு பலாத்காரம்: போலி சாமியார்களுக்கு வலை

காளஹஸ்தி: குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக கூறி 16 வயது சிறுமியை போலி சாமியார்கள் 3 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார், போலி சாமியார்களை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மகாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசுப்பையா(55), பாஸ்கர்(60). இவர்கள் இருவரும் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி பூஜை செய்வது வழக்கமாம். மேலும், நாங்கள் பூஜை செய்தால் உங்கள் அனைத்து பிரச்னைகளும் தீரும் என அப்பகுதி மக்களை நம்ப … Read more

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்: அமைச்சர் சாமு.நாசர் மலர்த்தூவி வரவேற்றனர்

ஊத்துக்கோட்டை: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் அமைச்சர்  சாமு. நாசர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம மக்கள் மலர்த்தூவி வரவேற்றனர்

சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து கண்ணையா(55) என்பவர் தீக்குளிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து கண்ணையா(55) என்பவர் தீ குளித்துள்ளார். தீக்குளித்த கண்ணையாவை மயிலாப்பூர் போலீசார் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி 256 வீடுகளை இடிக்கும் பண்ணி கடந்த 29-ல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: சென்னையில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முகக்கவசம் கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்புக்காக போடுவது அவசியம் என கே.கே.நகரில் 29-வது மெகா தடுப்பூசி முகாமை துவக்கிவைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் தக்காளி வைரஸ் காய்ச்சல்: 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் புதியவகை வைரஸ் காய்ச்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் எனப்படும் புதியவகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் வேகமாக பரவிவரும் ஆரியங்காவு, நெடுவதூர் ஆகிய பகுதிகளில் … Read more

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சர்ச்சை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும். தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அகரமேல் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கரும்புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரிந்துரையை ஏற்றது ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: முழு பலம் எட்டியது

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரையின்பேரில் 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, 34 நீதிபதிகளுடன் மீண்டும் முழு எண்ணிக்கையை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் 2 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷூ துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமயிலான கொலிஜியம் இரண்டு நாட்களுக்கு முன் … Read more