ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரியவழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையால் பக்தர்கள் அதிகரிப்பு திருப்பதியில் வாராந்திர சேவைகள் ரத்து

திருமலை: கோடை விடுமுறையால் பக்தர்கள் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் வாராந்திர சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 20 அறைகளில் பக்தர்கள் காத்திருந்து 8 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என … Read more

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

அமராவதி: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் டங்குடூர் சுங்கச்சாவடியில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, ரவி ஆகியோரிடம் இருந்து 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,451 பேருக்கு கொரோனா..40 பேர் பலி.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,451 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,02,194-ஆக உயர்ந்தது.* புதிதாக 40 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

மபியில் பரிதாபம் அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து 7 பேர் பலி

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரின் விஜய்நகர் பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலை இங்குள்ள வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளிலும் பரவியது. வீடுகளுள் தீப்பற்றி எரிந்ததால் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடிவர முயற்சித்துள்ளனர். சிலர் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து … Read more

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு என்பதே கிடையாது: ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்

சென்னை: நிலக்கரி தட்டுப்பாடு என்பதே கிடையாது, மாநில அரசுக்கு தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்குகிறது என ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி வரி விதிப்பிற்கும் ஒன்றிய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று காலை புயலாக உருவாக்கி தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என இந்திய வானிலை மையாக கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் ஒன்றில் ஒரே நாளில் 1 லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல்முறை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்த்துள்ளார்.

நவீன அம்சங்களுடன் அதிவேகமான ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் முதல் பெட்டி ஒப்படைப்பு

சவ்லி: ரயில்வேயை அதிநவீனமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, அதிவேக ஆர்ஆர்டிஎஸ் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் டெல்லியில் இருந்து உபியின் மீரட் வரை முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. சராசரியாக 100 கிமீ வேகத்தில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயிலை விட 3 மடங்கு வேகத்தில் செல்லும். இந்த ரயில் பெட்டிகளில் வைபை வசதி, விசாலமான … Read more

மே-08: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.