சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதி சிறத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு இவ்விரு பிரச்சனைகளும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், எனவே … Read more

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்ப்பு.: காவல்துறை

சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமனறத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குகள் பதிவு

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் 4-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 11 மணி  நிலவரப்படி 22.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.

2019-ம் ஆண்டு ஜூன் 23-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும்.: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2019-ம் ஆண்டு ஜூன் 23-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனிநீதிபதி கல்யாண சுந்தரத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியால் ஆட்சியை பிடிக்க முடியாது: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சர்ச்சை பேட்டி

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4 ஆம் கட்ட தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, செய்தியாளர்களை சந்தித்து சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக பேட்டி அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிட்டாலும், அதன் தலைவர் மாயாவதி எந்த தொகுதியிலும் போட்டி இடவில்லை. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட தேர்தலில் … Read more

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை : நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டதாக சங்க உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

உக்ரைனில் இருந்து 242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்!!

டெல்லி : உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் தாயகம் திரும்பியது. உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 242 இந்தியர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

பிப்-23: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அலியா பட் படத்துக்கு 4 காட்சிகளில் ‘கட்’

மும்பை: அலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி படத்துக்கு 4 இடங்களில் சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்தி படம் கங்குபாய் கத்தியவாடி. இந்த படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 17ம் தேதி இந்த படம் சென்சாருக்கு சென்றது. அப்போது சில காட்சிகளை சுட்டிக் காட்டி அந்த காட்சிகளை முழுமையாக நீக்கும்படி சென்சார் அதிகாரிகள், படக்குழுவுக்கு தெரிவித்தனர். ஆனால் இதை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,923,026 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,923,026 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 427,890,273 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 355,436,959 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 80,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.