சுஷாந்த் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்: டெல்லியில் சகோதரிகள் பங்கேற்பு

புதுடெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்துக்கு நீதி கோரி, அவரது சகோதரரிகள் மற்றும் ரசிகர்கள் சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடந்தது. பீகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கை துரிதப்படுத்தவும், நீதி கோரியும் … Read more

குண்டூர் ராமர் கோயிலில் 40 டன் எடையுள்ள கொடி மரம் கிரேனில் தூக்கியதால் உடைந்தது

திருமலை: ஆந்திரா குண்டூர் மாவட்டம், பிடுகுராலாவில் உள்ள பண்டிதவாரி பாளையம் கிராமத்தில் பழமையான கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் 40 டன் எடையுள்ள 44 அடி உயரமுள்ள கொடிமரம் கடந்த 1963ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பழமையான இந்த கொடிமரம் குதிகொண்ட பில்லம் மலையில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒற்றைக்கல்லால்  செய்யப்பட்டதாகும். பழமையான இந்த கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து, கொடிமரத்தை தற்போதுள்ள நிலையில் இருந்து சிறிது தூரம் நகர்த்த அதிகாரிகள் முடிவு … Read more

பழனி நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக

பழனி: பழனி நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 20 வார்டுகளில் வெற்றி பெற்றது. பழனி 12-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சின்னத்தாய் மற்றும் விசிக வேட்பாளர் முருகேசன் 500 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க குலுக்கல் முறையில் சுட்டு குலுக்கி போடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட விசிக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கிட்னி சரியில்லை லாலு பிரசாத் உடல்நிலை மோசமாகிறது

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தொடர்ந்து சிறை தண்டனை பெற்று வருகிறார். ஏற்கனவே, 4 வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 5வது வழக்கிலும் நேற்று முன்தினம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு: சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் 178 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக 153 வார்டுகளிலும், காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் , விசிக தலா 4 , மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 15 வார்டுகளிலும், அம,முக 1, பாஜக 1, சுயேட்சை 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

59 எம்எல்ஏ பதவிகளுக்கு 624 பேர் போட்டி: உ.பி-யில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 58 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் 2ம் கட்டமாக நடந்த தேர்தலில் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்களும், நேற்று முன்தினம் நடந்த 3ம் கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் 627 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்நிலையில் உத்தர … Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற 2 வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற கீதா முருகேசன், சுப்பு லட்சுமி ஆகியோர் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 60 வார்டுகளை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் திமுகவின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் ‘அட்மிட்’: மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு

ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் கடந்த 15ம் தேதி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு நேற்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று 5வது வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள … Read more

மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி

சென்னை: மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம் என அமமுக பொதுச்ச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக  வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்த மக்களுக்கு டிடிவி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை: நொய்டா நகராட்சி உத்தரவு

நொய்டா: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நொய்டா நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இப்படி வாகனம் ஓட்டும்போது சிறுவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 … Read more