வைகோவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். கொரோனால் பாதிக்கப்பட்ட வைகோ குணமடைந்த நிலையில் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாக கோபிறப்படுகிறது.

சிறார்களுக்கு வருகிறது புதிய தடுப்பூசி: 12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் ..!

டெல்லி: 12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மாதிரிகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், அதில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல முடிவு கிடைத்துள்ளது. இந்நிலையில் 12 – 18 … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளன: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பெண்ணை படுக்கைக்கு அழைத்த இன்ஸ். மீது வழக்கு

பில்வாரா: ராஜஸ்தானில் பெண்ணை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக, அவரை படுக்கைக்கு அழைத்த இஸ்பெக்டர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திர சிங் என்பவர், குடும்ப விவகாரம் தொடர்பான புகார் ஒன்றை விசாரித்து வந்தார். இவ்விகாரத்தில் கணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக, அந்த பெண்ணின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் சென்றார். அங்கிருந்த அந்த பெண்ணிடம், … Read more

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவினரின் அத்துமீறல் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜெயக்குமாரை கைது செய்தது காவல்துறை

சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது

சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது 2/21/2022 5:46:49 PM சரத்குமார் நடித்துள்ள முதல் வெப் தொடர் இரை. இதனை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார் தவிர ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கடாரம் கொண்டான், தூங்காவனம் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி உள்ளார். சரத்குமாருடன் கிருஷ்ண தயாள், அபிஷேக் சங்கர், நிழல்கள் ரவி, கவுரி நாயர், ஷரிஷா ஆகியோர் நடித்துள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கி உள்ளார். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் கொடியவர்களை வேட்டையாடும் … Read more

ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது: தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் ெதாற்றின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய வைரசான ‘பிஏ.2’ என்ற வைரஸ் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும் திறன் கொண்டதால், அதனை கவலையளிக்கும் உருமாறிய வைரஸ் என்று அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜப்பான் ஆய்வக சோதனைகள் முடிவில், பிஏ.2 தொற்று வைரசானது, டெல்டா உட்பட … Read more

ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை

மாஸ்கோ: உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான போர் வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் 5 பேரை சுட்டுக்கொன்றதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா 2/21/2022 5:48:47 PM இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளாார் இளையராஜா. திரைப்படம் தவிர்த்து, இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “How to Name it” ஆல்பம் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் பத்து தனி … Read more

12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: 12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது