தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியீடு

சென்னை: தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 43.65% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல்; கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை; தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை அருகே தானேவில் உள்ள ஷஹாபூர் தாலுகாவின் வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை அடுத்த சில நாட்களுக்குள் கொல்ல தானே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜே நர்வேகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்: வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சுமார் 100 கோழிகள் இறந்துள்ளன.பறவைக் … Read more

சென்னையில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக 12 பேர் கைது

சென்னை: சென்னையில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக கடந்த 7 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.13 முதல் 19 வரை நடைபெற்ற சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2.8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.77% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.77% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.18% வாக்குகள் பதிவாகியுள்ளது.

உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல்: காலை 9.30 மணி நேர நிலவரப்படி 8.15% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 8.15% வாக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 600கனஅடி நீர் திறப்பு

தமிழகம்- கேரளா  எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 71கனஅடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 600கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 4,802 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பஞ்சாப் மாநில 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

மொகாலி; பஞ்சாப் மாநில 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 93 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜார்க்கண்ட் பட்டியலில் இருந்து போஜ்புரி, மாகி மொழிகள் நீக்கம்

ராஞ்சி:  ஜார்க்கண்ட் மாநில பணியாளர்  தேர்வு ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான தேர்வுகளில் போஜ்புரி, மாகி  போன்ற வட்டார மொழிகள்  சேர்க்கப்பட்டன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்பாத், போக்காரோ மாவட்டங்களில் மொழி பாதுகாப்பு கமிட்டி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. 2  மாவட்டங்களிலும் பரவலாக  இந்த மொழியை பேசுவோர் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் சர்ச்சைக்குரிய இந்த உத்தரவு போடப்பட்டது என்று  … Read more

பிப்-20: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,900,167 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,900,167 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 423,502,256 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 348,498,084 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,792 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.