தினமலர்
ரஞ்சி கிரிக்கெட்; அறிமுகப்போட்டியில் முச்சதம் அடித்து பீஹார் வீரர் சாதனை| Dinamalar
கோல்கட்டா: கோல்கட்டாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை சேர்ந்த சகிபுல் கனி என்பவர், தனது அறிமுகப் போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசிய முதல் வீரர் என்னும் சாதனை புரிந்துள்ளார். 56 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 341 ரன்கள் விளாசினார். கோல்கட்டா: கோல்கட்டாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை சேர்ந்த சகிபுல் கனி … Read more
மகனுக்காக காமெடி படம் இயக்கும் தங்கர் பச்சான்
இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் படம் “தக்கு முக்கு திக்கு தாளம்”. முதல் முறையாக தனது பாணியில் இருந்து மாறுபட்டு சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் … Read more
புதிய டெல்டக்ரான் வைரஸ் பிரிட்டனில் பாதிப்பு அறிகுறி| Dinamalar
லண்டன்:பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, ‘டெல்டக்ரான் வைரஸ்’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புதிய வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்வதாக, பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வைரஸ், இந்தியா உட்பட உலகளவில் இரண்டாவது அலையாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ், மூன்றாவது அலையாக பரவி உலகை வாட்டி வருகிறது. இந்நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்கள் இணைந்த, ‘டெல்டக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது … Read more
ஏப்ரலில் கமல்ஹாசனின் விக்ரம் ரிலீஸ்
கமல்ஹாசன் நடிக்கும் 232 வது திரைப்படமான “விக்ரம்” படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. சமீபத்தில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக … Read more
இந்தோனேஷிய மொழியில் ரீ-மேக் ஆகும் “ஒத்த செருப்பு சைஸ் 7”
பன்முக ஆளுமையான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. தேசிய விருது பெற்ற இந்த படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி இருந்தார். மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களின் நடுவர்களில் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்க ரீ-மேக் செய்து வருகிறார் பார்த்திபன். இந்நிலையில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் இந்தோனேசியாவில் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை PT … Read more
54 செயலிகளுக்கு தடை சீன அரசு கவலை| Dinamalar
பீஜிங்:சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, சீன வர்த்தக அமைச்சக செய்தி … Read more
2ம் நாளாக முடங்கிய கர்நாடக சட்டசபை இரவு, பகல் தர்ணா ஆரம்பித்த காங்கிரஸ்| Dinamalar
பெங்களூரு-கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரசார் இரண்டாவது நாளாக சட்டசபையை முடக்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அவரை நீக்கும்வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று, சட்டசபையிலேயே தங்கி, இரவு, பகல் தர்ணா நடத்தி வருகின்றனர்.டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர்.எனவே அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க … Read more