இந்தியா வெறும் நட்பு நாடல்ல அதற்கும் மேலே: அமெரிக்கா நெகிழ்ச்சி| Dinamalar

வாஷிங்டன்: “இந்தியா வெறும் நட்பு நாடு மட்டுமல்ல, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விடவும் தினசரி அடிப்படையில் இந்தியாவுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறோம்.” என அமெரிக்க வெளியுறவு செயலர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலைமையை மீட்டெடுக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து உள்ளது. சீனாவுடனான போட்டி … Read more

கல்யாண கோலத்தில் செந்தில் – ராஜலெட்சுமி : போட்டோஷூட் வைரல்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜோடியாக அறிமுகமாகி டைட்டிலை வென்றவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி. தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். அதிலும், ராஜலெட்சுமி புஷ்பா படத்தில் பாடிய சாமி சாமி பாடல் உலக அளவில் வைரலாக ஒலித்து வருகிறது. இதற்கிடையில் செந்தில் கணேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதேசமயம் கணவன் மனைவி இருவருமே தற்போது சில விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் … Read more

சிங்கப்பூர் பிரமதருக்கு கண்டனம்| Dinamalar

சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான அந்நாட்டு பிரதமர் லீ சியென் லுாங் , இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த நேரு உருவாக்கிய இந்தியாவில், இன்று கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பாராளுமன்ற எம்.பி.,க்களாக உள்ளனர் என்றார். பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ,டில்லியில் … Read more

நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக … Read more

தனுஷ் பாசத்தில் யாத்ரா தனுஷ் : வைரலாகும் புகைப்படம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்ததாக ஜனவரி மாதம் அறிவித்தனர். தற்போது இருவரும் அவரது பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ், நானே வருவேன், வாத்தி படங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தனது ஆல்பம் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இப்போது, இதை நான் இதற்கு முன்பு எங்கே பார்த்தேன்? #யாத்ராதனுஷ். #நானேவருவேன் என பதிவில் எழுதியுள்ளார் தனுஷ். … Read more

'காட்பாதர்' படப்பிடிப்பை முடிக்கப் போகும் நயன்தாரா

மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிரஞ்சீவி மனைவியாக 'சைரா' படத்தில் நடித்த நயன்தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடித்து வருகிறார்.. மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'தனி … Read more

ஸ்வஸ்திக்கை அவமானப்படுத்த கூடாது கனடாவில் ஹிந்து அமைப்பு வலியுறுத்தல்| Dinamalar

வாஷிங்டன்:’ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ‘ஸ்வஸ்திக்’ சின்னத்தை, ‘நாஜி’க்களின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்த கூடாது’ என, வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஹிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.‘கனடாவில் லாரி ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்; தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்’ என அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் … Read more