சீரியல் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதஸ் ஹாட் கிளிக்ஸ் வைரல்

கேரளாவை சேர்ந்த அஸ்ரிதா ஸ்ரீதாஸ் குழந்தை நட்சத்திரமாக மீடியாவில் அறிமுகமானார். இதுவரை 35க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள அஸ்ரிதா, தமிழில் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலங்களில் மாடலான உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் குட்டையான உடை அணிந்து அஸ்ரிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை மயக்கி டிரெண்டிங்கில் இடம்பிடித்து … Read more

ஜாபர் சாதிக் விவகாரம்! இயக்குனர் அமீருக்கு சம்மன்!

கடந்த மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை மற்றும் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப்பெரியவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதனால் ஜாபர் சாதிக் கைதானபோது அவருடன் அமீரையும் இணைத்து சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு … Read more

இந்த வாரமும் இத்தனை படங்களா? எது ஓடும்…?

2024ம் ஆண்டின் மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. முக்கியப் படங்கள் எதுவும் இல்லாமல் கடந்த மாதமும் கடந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திலாவது தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தரக் கூடிய படங்கள் ஏதாவது வராதா என பலரும் காத்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழனன்று ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்வன்' படம் வருகிறது. அதற்கடுத்த தினமான வெள்ளியன்று ஏப்ரல் 5ம் தேதி “டபுள் டக்கர், … Read more

இளையராஜா படத்தின் புதிய அப்டேட்!

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 'இளையராஜா' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து ஒரு சில காரணங்களால் கமல்ஹாசனால் இதற்கு திரைக்கதை எழுத முடியாத காரணத்தால் இப்போது … Read more

எங்களை விட பிரித்விராஜூக்கு தான் பஞ்ச் வசனங்கள் அதிகம்: அக்சய் குமார்

பாலிவுட்டில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிரித்விராஜ். ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மூன்றிலுமே வில்லனாகத்தான் நடித்திருந்தார். இந்த நிலையில் … Read more

பட்டப்பெயர் வைத்துக் கொள்ளாதது ஏன் ? விஜய் தேவரகொண்டா விளக்கம்

சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று, நான்கு படங்கள் ஹிட் கொடுத்து விட்டாலே அடுத்ததாக அவர்கள் பெயருக்கு முன்னால் தானாகவே ஒரு பட்டம் சேர்ந்து கொள்ளும். ரசிகர்கள் அன்பாக கொடுத்தார்கள், தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள் என காரணம் சொல்லிக்கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களும் ஆர்வத்தோடு தங்களுக்கு பட்டம் சூட்டி கொள்வார்கள். இப்படி வளர்ந்து வந்த காலத்தில் தான் நடிகர் பரத் சின்ன தளபதி என்றும் விஷால் புரட்சி தளபதி என்றும் டைட்டில் போட்டுக் கொண்டதும் சில படங்களிலேயே அந்த டைட்டிலை தூக்கி … Read more

ரஜினியின் தோல்வி பட டைட்டிலையே மீண்டும் வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு?

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதை உருவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் லுக் குறித்த ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த போஸ்டரை வைத்து இந்த படம் டைம் டிராவல் கதையாக இருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த படம் தங்கக்கடத்தல் சம்பந்தமான கதையில் உருவாகிறது என்றும் ரஜினிகாந்த் ஒரு கடத்தல் மன்னனாக நெகட்டிவ் ரோலில் … Read more

‛சுந்தர் சி படம் என்றால் ஓகே, அவ்வளவு நம்புகிறேன்': தமன்னா

கடந்த 2014ம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், 2016ல் 2ம் பாகமும், 2021ல் 3ம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார் சுந்தர்.சி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை … Read more

அட்லியின் புதிய 'கண்டிஷன்', ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா

'ஜவான்' படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்துள்ளவர் தமிழ் இயக்குனரான அட்லி. அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது அல்லு அர்ஜுன் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் தயாரித்து பான் இந்தியா படமாக அப்படத்தை வெளியிடப் பேசி வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய 'கண்டிஷன்' ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார் என டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி … Read more

போட்டிங் வித் மை பாய்ஸ் – நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியர் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், முதன்முறையாக தங்கள் மகன்களை போட்டிங் அழைத்துச் சென்றுள்ளார்கள். இது அவர்களுக்கு முதல் அனுபவம் என்பதால், தண்ணீரை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நயன்தாரா, அந்த வீடியோவுக்கு ‛போட்டிங் வித் மை பாய்ஸ்' என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.