சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி

கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். அதையடுத்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தர்மம் வெல்லும் என்ற பெயரில் உருவாக இருந்தது. சூர்யாவிடத்தில் கதை சொல்லி இருந்தார் நலன் குமாரசாமி. பின்னர் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. அதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி. இந்த நிலையில்தான் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி … Read more

மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இளையராஜா என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி- கமல் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் சிம்புவும், மணிரத்னம் வேடத்தில் மாதவனும், பாடலாசிரியர் வைரமுத்து வேடத்தில் விஷாலும் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இளையராஜா பயோபிக் படம் ஒரு மல்டி ஸ்டார் … Read more

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்து 75 கோடி வரை வசூல் செய்தது. அதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சாய்பல்லவி நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் … Read more

சித்தார்த் – அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது…! – இருவரும் அறிவிப்பு

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருபவர் சித்தார்த். ஆரம்பத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் ஷங்கர் இயக்கிய ‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே இருவரும் கலந்து கொண்டனர். நேற்றைய … Read more

திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி

காமெடி நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவரது மகள் தேஜஸ்வினி – பரத் திருமணம் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வந்தார். அதேபோல் தனது மகளின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை, பூச்செடிகளை பரிசாக வழங்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று தனது திருமணத்தையொட்டி தந்தையின் கனவை நனவாக்கும் வகையில், … Read more

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் இந்தப்படம் தயாராகி உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இது சூர்யாவின் 43வது படமாக உருவாக உள்ளது. இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சூர்யா-கார்த்தி சுப்பராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் இணைந்து படம் பண்ணுவது … Read more

மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார்

உலகையே உலுக்கிய சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இப்போது 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதை ரஞ்சன் … Read more

சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? – நடிகையே சொன்ன உண்மை

சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் – பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து தற்போது நேஹா … Read more

கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன்

நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் … Read more

வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ்

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். பாண்டவர் இல்லம் தொடரில் முடிந்தது முதலே மற்ற நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காத அவர், தற்போது விஜய் டிவியில் புதிதாக உருவாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் வில்லியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான நிலையில் ஆர்த்தி சுபாஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.