எனது இரண்டு ஆசையில் ஒன்று நடந்துள்ளது : தனுஷ் மகிழ்ச்சி

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ‛இளையராஜா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கமல் முன்னின்று படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார். படத்தின் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், ‛‛நம்மில் பல பேருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜாவின் இசை, பாட்டை கேட்டு தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் நடித்து … Read more

Tirupur Kallakadali arrested for auto driver murder | ஆட்டோ டிரைவர் கொலை திருப்பூர் கள்ளக்காதலி கைது

சேலம், சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் நிஷார் பாட்ஷா, 45. சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஹசீனா, 43. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். டிரைவருக்கும், திருப்பூர், நெரிபேரிச்சாலையை சேர்ந்த அருள்மரியா மகள் பிரியா, 45, இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. பிரியா, சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். அங்கு கடந்த, 13ல் துர்நாற்றம் வீசியது.கிச்சிப்பாளையம் போலீசார், அங்கு சென்றபோது, டிரைவர் இறந்து கிடந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை … Read more

தேர்தல் நேரம்… மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது : ரஜினி பேச்சு

நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், ‛‛நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே அதில் நானும் பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை போய்விட்டு வந்துள்ளது. எனக்கு … Read more

Happiest country in the world: Finland remains at the top | உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து முதலிடத்தில் பின்லாந்து

புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் பின்லாந்து தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், இஸ்ரேல் … Read more

ரோலக்ஸ் படம் குறித்து சூர்யா வெளியிட்ட அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. அந்த கேரக்டரில் சூர்யாவின் மிரட்டலால் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் நேற்று கங்குவா படத்தின் டிரைலர் விழாவில், நடிகர் வருண் தவான், ரோலக்ஸ் படம் குறித்து சூர்யாவிடத்தில் கேள்வி எழுப்பிய போது, … Read more

Emergency airstrip on National Highway | தேசிய நெடுஞ்சாலையில் அவசரகால விமான ஓடுதளம்

புதுடில்லி, ஆந்திராவில், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால தரையிறங்கும் வசதியுடைய விமான ஓடுதளம், நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், அவசர காலத்தில் தரையிறங்கும் வசதியுடைய விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நம் விமானப் படையினரிடம் இருந்து குறிப்புகளை பெற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இந்த ஓடுதளம் அமைக்கும் பணியை செய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில், அடங்கி என்ற இடத்தின் அருகே உள்ள என்.எச்., — … Read more

'ஆடுஜீவிதம்' படம் பார்த்த ரியல் ஹீரோவின் ரியாக்சன்

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பென்யமின் என்கிற எழுத்தாளர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று அங்கே ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல சிரமங்களை சந்தித்த நஜீப் என்பவரின் நிஜமான வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த கதையின் நிஜ ஹீரோவான … Read more

Is M.J.T. being a parrot to sleep? | இலவு காத்த கிளியாகிறதா ம.ஜ.த.,?

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ., உடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா முந்திக்கொண்டு அறிவித்தார். லோக்சபா நேரத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேசிக் கொள்ளலாம் என்று கருதி, ம.ஜ.த., தலைவர்களும் வேறுவழியில்லாமல் அதை ஆமோதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ம.ஜ.த., உடன் கூட்டணி அமைப்பது குறித்து, கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்கள் துவக்கத்தில் காட்டிய வேகத்தை, டில்லி மேலிடம் காட்டவில்லை; நிதானத்தையே கடைபிடித்தனர். தொகுதி பங்கீடு … Read more