நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்

கடந்த 2003ம் ஆண்டு மாதவன், பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்த ‛ஜேஜே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. அப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். பின்னர் ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம் போ ஆகிய படங்களில் வரிசையாக நடித்தாலும், பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த ‛நான் கடவுள்' படம் நடிகை பூஜாவிற்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. 2016ம் ஆண்டு இலங்கையை … Read more

Sparrow Day | சிட்டுக்குருவி தினம்

* அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பறவைகளில் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் ‘கீச் கீச்’ எனக் கூக்குரலிடும். இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.* மக்கள் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. * அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை … Read more

4 Tamilnadu passengers killed as van overturns in Kerala | கேரளாவில் வேன் கவிழ்ந்து தமிழக பயணியர் 4 பேர் பலி

கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். திருநெல்வேலியில் செயல்படும் தனியார் பிரஷர் குக்கர் தயாரிக்கும் கம்பெனி ஊழியர்கள், டீலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது. அவர்கள் வேன், கார் மூலம் இரண்டு நாட்களுக்கு முன் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அருகே மாங்குளம் ஊராட்சியில் முக்கிய … Read more

சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படம் 'கங்குவா'. இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 38 மொழிகளில் வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். 'பாகுபலி, கேஜிஎப், ஆர்ஆர்ஆர், ஜவான்' படங்கள் போல இந்தப் படத்தையும் பெரிய வெற்றி, பெரிய வசூல் தரும் விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் காரணமாக சூர்யா நடிப்பில் … Read more

Right to Arunachal Pradesh: Centers response to China | அருணாசல பிரதேசத்துக்கு உரிமை : சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி

புதுடில்லி : அருணாசல பிரதேசத்தை தன் பகுதியாக சீனா உரிமை கோருவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான், என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தென் பகுதிக்கு உட்பட்டது என்று சீனா கூறி வருகிறது. இதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் … Read more

'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா?

மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு இனம் புரியாத ஒரு அபிமானம் உண்டு. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து ராணியாகத் திகழ்ந்த பல நடிகைகள் உண்டு. அவர்களது வரிசையில் இடம் பிடிப்பாரா 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. மலையாளத்தில் வெளியாகி 100 கோடி வசூலைக் கடந்து தமிழிலும் டப்பிங் ஆகி கடந்த வாரம் வெளியான படம் 'பிரேமலு'. அப்படத்தின் கதாநாயகி மமிதா பைஜு, … Read more

Arrangements for media to vote by post: Election Commission | ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு : தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளதுஎன தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதாவது: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் ஓட்டு வாக்களிக்க ஏற்பாடு … Read more

நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை தீபா. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், 'எங்களை யாராவது ஏமாற்றி விட்டால் அவர்களுக்காக காத்திருக்க வேண்டுமா? ஆண்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா? எங்களுக்கு கிடையாதா? இளம் வயதில் கணவரை இழந்த பெண் யாருடனாவது போய்விட்டால் அவளுக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள். நீங்கள் ஏன் அவளுக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை. நாங்கள் பாடக்கூடாது, ஆடக்கூடாது, சிரிக்கக்கூடாது. அப்படி … Read more

மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா!

நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. தொடர்ந்து பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். இவருக்கு ‛மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமாகி ஒரு வருடத்திலேயே அரவிந்த் இருதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த பெருந்துயரை மெல்ல மெல்ல கடந்து வந்த ஸ்ருதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‛லெட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவை … Read more