தினமலர்
Central minister explains the chiving tiger that gave birth to 6 cubs | 6 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி மத்திய அமைச்சர் விளக்கம்
போபால், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும், காமினி என்ற பெண் சிவிங்கிப்புலி, ஐந்து குட்டிகள் ஈன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது ஆறு குட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக, 2022 செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை ம.பி.,யின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். இதைத் தொடர்ந்து, தென் … Read more
'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா?
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இரண்டு தெலுங்குப் படங்கள் உள்ளன. ஒன்று பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி', மற்றொன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'. தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 9ம் தேதி 'கல்கி 2898 எடி' படம் வெளியாகுமா … Read more
5-storey building collapses to ground level in Kolkata; 9 people died | கோல்கட்டாவில் 5 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்; 9 பேர் பலி
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் கட்டுமான பணியில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் கார்டன் ரீச் பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்திற்கு உரிய அனுமதியின்றியும், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றியும் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அக்கட்டடத்தின் கட்டுமான பணிகளை ஏராளமான தொழிலாளர்கள் மேற்கொண்டு … Read more
போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்'
2024ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து தமிழ்ப் படங்களாவது வந்துவிடுகிறது. ஒரு படமாவது ஓடி விடாதா, வசூலையும், லாபத்தையும் தந்துவிடாதா என தியேட்டர்காரர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம்தான் அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளியான புதிய படங்களின் சத்தம் ஓரிரு காட்சிகளுக்குக் கூட கேட்கவில்லை. இந்த வாரம் சொல்லிக் கொள்ளும்படியான நான்கைந்து படங்களாவது வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுவரை வெளியான அறிவிப்புகளின்படி 'ரெபல், சிட்டு' ஆகிய … Read more
விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் … Read more
Fake cancer drug raid in Delhi | புற்றுநோய்க்கு போலி மருந்து டில்லியில் அதிரடி ரெய்டு
புதுடில்லி, தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு, புற்றுநோய் மற்றும் கீமோதெரபி மருந்துகள், போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று, இது தொடர்பாக டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 10 … Read more
தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி
இறைவன், சைரன் படங்களுக்கு பிறகு பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதில், வரப்போகிற மக்களவை தேர்தலில் நமது நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் … Read more
19 children were treated after the death of a boy who ate panipuri | பானிபூரி சாப்பிட்ட சிறுவன் பலி 19 குழந்தைகளுக்கு சிகிச்சை
தாவணகெரே, ரம்ஜான் நோன்பு துவங்கி உள்ளதால், மாலை நடக்கும் தொழுகைக்கு பின்னரே முஸ்லிம்கள் உணவு உட்கொள்வர். இதனால், தொழுகை நடக்கும் மசூதிகளின் அருகில் பல்வேறு வகையான சிற்றுண்டி கடைகள் அமைக்கப்படும். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் மலேபென்னுாரில் உள்ள ஜாமியா மசூதி அருகில் கடந்த 14ம் தேதி மாலை தொழுகை முடித்து, முஸ்லிம்கள் உணவு சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் வந்த சிறார்கள் சிலர், அப்பகுதி தள்ளுவண்டியில் விற்கப்பட்ட பானிபூரியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில், ஹஸ்ரத் பிலாலின் … Read more