Voting in Kerala for Russian presidential election | ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் ஓட்டுப்பதிவு

திருவனந்தபுரம், ரஷ்ய அதிபர் தேர்தலையொட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு ஓட்டுச்சாவடியில், ரஷ்யர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்று துவங்கி, நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. ரஷ்யாவுக்கு உள்ளேயே, 11 விதமான நேர மண்டலங்கள் உடைய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். உக்ரைன் போருக்குப் பின், ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதி மக்களும் இந்த தேர்தலில் ஓட்டளித்து வருகின்றனர். இதுதவிர, வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் ஓட்டளிக்க வசதியாக பல்வேறு … Read more

வழக்கத்திற்கு மாறான பாணியில் படம் இயக்கும் ஜிமிக்கி கம்மல் இயக்குனர்

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ். மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படம் இயக்கியுள்ள இவர் துல்கர் சல்மானை வைத்து விக்கிரமாதித்யன் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியவர். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும் போல்' என்கிற படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடல் எந்த அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனது என்பது ரசிகர்கள் அறிந்த வரலாறு. சமீபகாலமாக ஒரு நடிகராகவும் மாறியுள்ள … Read more

அறிவிப்பு நாளிலேயே ரிலீஸ் அப்டேட் : மகிழ்ச்சி, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்

'அப்டேட், அப்டேட்,' என்ற வார்த்தையைப் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். 'வலிமை' அப்டேட், 'துணிவு' அப்டேட், தல 62 அப்டேட், விடாமுயற்சி அப்டேட்' என அவர்கள் அப்டேட் கேட்காத இடங்களும், நாட்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பிரதமரின் சென்னை விஜயம், கிரிக்கெட் போட்டிகள் என அவர்கள் அப்டேட் கேட்கும் அளவிற்கு அதிர்ச்சியையும் தந்தார்கள். அப்படி 'அப்டேட்' கேட்கும் ரசிகர்கள், இனி அப்டேட் கேட்காத அளவிற்கு 'குட் பேட் அக்லி' பட நிறுவனம் … Read more

Russian presidential election: Vladimir Putin has leaked online | ரஷ்ய அதிபர் தேர்தல் : ஆன்லைன் வாயிலாக ஒட்டளித்தார் விளாடிமிர்புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று துவங்கியது. ஆன்லைன் வாயிலாக ஓட்டளித்தார் அதிபர் விளாடிமிர்பு டின். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று துவங்கிய அதிபர் தேர்தல் வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. புதிய அதிபரை தேர்வு செய்ய ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதே … Read more

தனுஷ் படத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரியங்கா மோகன்

தனுஷ் இயக்குனராக தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதுதவிர 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தனுஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் … Read more

துல்கர் சல்மான் படத்தில் ஹனுமான் ஹீரோ

நடிகர் துல்கர் சல்மான் மலையாள படங்களைக் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து துல்கர் சல்மான் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இதை ஈகிள் பட இயக்குனர் கார்த்திக் கட்டாமணி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக ஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கின்றார். மேலும், இதில் வில்லன் … Read more

ஒட்டகத்தின் கடைக்கண் பார்வை கிடைக்க ஏழு நாட்கள் ஆனது : பிரித்விராஜ்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தனது திரையுலக பயணத்தில் இதுவரை இல்லாத உயிரைக் கொடுத்து நடித்துள்ள படம் என்று சொல்லும் விதமாக ஆடுஜீவிதம் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டிற்கு ஒட்டகம் மேய்க்கச் செல்லும் இளைஞன் ஒருவன் அங்கு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறான் என்பது குறித்து இந்த படம் விவரிக்கிறது. … Read more

‛கைதி 2' படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'கைதி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், மாஸ்டர், விக்ரம், லியோ என லோகேஷ் தொடர்ந்து பிஸியாக படங்களை இயக்கி வந்தார். அதேப்போல் கார்த்தியும் அடுத்தடுத்து தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் கைதி 2 தாமதமாகி வருகிறது. நேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான … Read more

The government of Nepal survived the vote of confidence | நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பியது நேபாள அரசு

காத்மாண்டு: நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள … Read more

Election date announcement today or tomorrow? | இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லோக்சபா தேர்தல் தேதிகளுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் மற்றும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக … Read more