வெந்து தணிந்தது காடு படத்துக்கு முதல் நாளில் இவ்வளவு கலெக்ஷன் வருமா.. சூப்பரான கணிப்பா இருக்கே!

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்திற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார் சிம்பு. இதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பல சர்ச்சைகளில் சிக்கி, தன்னுடைய சினிமா கேரியரை சிக்கலாக்கிக் கொண்டிருந்த சிம்பு … Read more

பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த போஸ்டர்கள்.. கார்த்தி போட்ட ஹாப்பி ட்வீட்!

சென்னை : மணிரத்னத்தின் இயக்கத்தில் அவரது கனவு ப்ராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்கள் மிகவும் பிரம்மாண்டமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது பொன்னியின் செல்வன். மிகவும் பிரம்மாண்டமான … Read more

2014 தமிழக அரசு விருது..சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார் !

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மீண்டும் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா, தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்த நடிகைக்கான விருதை … Read more

ரஜினி – கமல் கன்பார்ம்.. களைகட்டும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா!

சென்னை : பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக சரியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. பொன்னியின் … Read more

சிறந்த நடிகர்கள் விக்ரம், கரண், பிரசன்னா,ஆர்யா, சித்தார்த்: தமிழக அரசு திரைப்பட விருதுகள் பட்டியல்!

சென்னை : தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள், சிறந்த சின்னத்திரை சீரியல்கள், சிறந்த நடிகர், நடிகை, அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வந்தது. கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு பிறகு, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு மொத்தமாக விருதை தமிழக அரசு அறிவித்தது. தமிழக … Read more

நாளை வெளியாகும் ரெட் ஜெயண்டின் அடுத்த அறிவிப்பு.. காபி வித் காதல்?

சென்னை : அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். சமீபத்தில் வெளியான விக்ரம், கோப்ரா, டைரி என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, கேப்டன், விடுதலை என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களையும் வெளியிட உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் … Read more

விஜய் டிவியில் இருந்து மற்றொரு சேனலுக்கு தாவிய ஆல்யா மானசா.. எந்த டிவி தெரியுமா?

சென்னை : சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காகாக இந்த தொடரின் இரண்டாவது பாகத்திலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து தன்னுடைய அடுத்தப் பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். ஆனால் தற்போது மீண்டும் விஜய் டிவி தொடரில் இவர் நடிக்கவில்லை. ராஜா ராணி தொடர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை … Read more

என்னது அடுத்த படமா? பட்டதே போதும் ஆள விடுங்கப்பா..தெறித்து ஓடிய விஜய் தேவரகொண்டா!

சென்னை : லைகர் பட தோல்வியால் இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் அடுத்தப் படமான ஜன கன மன திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்த லைகர் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருந்தார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகின இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், … Read more

நீ தான் என் புருஷா..ஐ லவ் யூ பொண்டாட்டி.மாறி மாறி காதல் மழை பொழியும்.. ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி!

சென்னை : புதுமண தம்பதிகளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி இணையத்தில் மாறி மாறி காதல் மழை பொழிந்து வருகின்றனர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சுட்டக்கதை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். வீஜேவாக பணியாற்றிய சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து வரும் மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் 1ந் தேதி திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் … Read more

அடுத்தடுத்து பெரிய படங்கள்.. சத்தமில்லாமல் சாதிக்கும் ’பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி!

சென்னை: விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தனுஷின் ஜகமே தந்திரம், சாய் பல்லவியின் கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட படங்கள் ஐஸ்வர்யா லட்சுமியின் கைவசம் உள்ளன. மருத்துவர் டு நடிகை நிவின் பாலி நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான Njandukalude Nattil Oridavela … Read more