ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..எப்போ தெரியுமா?அண்ணன் சத்தியநாராயண ராவ் சொன்ன மாஸ் தகவல்!

சென்னை : ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் யோகிபாபு,மலையாள நடிகர் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அண்ணாத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் … Read more

விக்ரம் – ரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம்: ஷூட்டிங் போகும் முன்பே கோடிகளில் வியாபாரம்?

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கோப்ராவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விக்ரம் நடிப்பில் அடுத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்ரம் தனது 61வது படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் விக்ரம் 61 விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், இம்மாதம் 30ம் தேதி வெளியாகிறது. … Read more

இரண்டு முறை அல்ல.. மூன்று முறை திருமணம் பண்ணிருக்கேன்.. குக் வித் கோமாளி புகழ் புது விளக்கம்!

சென்னை: குக் வித் கோமாளி புகழ் திருமணம் கடந்த செப்டம்பர் 1ம்தேதி விநாயகர் கோயிலில் நடைபெற்றது. புகழ் திருமணத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, சசி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், இதற்கு முன்பே ஒரு வருடத்திற்கு முன்பு நடிகர் புகழுக்கும் அவரது காதலி பென்ஸியாவுக்கும் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் போட்டோ ஆதாரத்துடன் வெளியாகின. காமெடி நடிகர் நடிகர் சந்தானம் ஹீரோவான பின்னர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு … Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை..அட பாலிவுட் ஹீரோயின் போல இருக்காங்களே?இனியாவது பட வாய்ப்பு வருமா?

சென்னை : பட வாய்ப்புக்காக பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆளே அடையாளம் தெரியாதபடி மாறி உள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி, குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமானார். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தனது திறமையான நடிப்பால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் கோலிகுண்டு கண்ணழகி என பெயர் எடுத்தவர் அதுல்யா ரவி. இவர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தின் … Read more

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதையில் மிரட்டும் Mirage: ஓடிடி ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத மூவி

சென்னை: உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் பொக்கிஷமாக ஓடிடி தளங்கள் காணப்படுகின்றன. வார விடுமுறையில் ஓடிடியில் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள் குறித்து பெரிய விவாதங்களே நடக்கின்றன. அந்தவகையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கான சிறப்பான படம் ஒன்றின் விமர்சனம் இதோ. நெட்பிளிக்ஸில் கிடைக்கும் Mirage தமிழில் மாநாடு, இன்று நேற்று நாளை, ஜீவி, நியூ போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படங்கள் அனைத்தும் டைம் லூப், டைம் … Read more

“செய்றது எல்லாமே தரமான சம்பவம் மட்டும் தான்”: இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். தற்போது விடுதலை படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து வெற்றிமாறனுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனி சகாப்தம் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது தனுஷுக்கும் … Read more

சீனாவையும் விட்டு வைக்காத தனுஷ், நித்யாமேனன்: பறக்க பறக்க துடிக்குதே பாட்டுக்கு க்யூட் பெர்ஃபாமன்ஸ்

சீனா: தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. 7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் – அனிருத் இருவரும் இந்தப் படத்தில் கூட்டணி வைத்தனர். திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான ‘பறக்க பறக்க துடிக்குது’ பாடல், செம்ம ஹிட் ஆனது. DNA கூட்டணியின் மேஜிக் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் தனுஷின் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இணைந்தது. இந்தப் படத்தில் தனுஷ் – … Read more

சபலம் தான் காரணம்? தயாரிப்பாளர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சினிமா பாணியில் தயாரிப்பாளர் பாஸ்கரன் என்பவரை சின்மயா நகர் பகுதியில் கொடூரமாக கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. முதலில் அடையாளம் தெரியாத பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணையில் அது சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பாஸ்கரனை கொலை செய்த விபச்சார புரோக்கர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர் பாஸ்கரன் … Read more

லண்டனில் சொந்தமா வீடு வாங்கல.. அது வாடகை வீடு தான்.. ட்ரோல் செய்தவர்களை விளாசிய குஷ்பு!

சென்னை: நடிகை குஷ்பு லண்டனில் புதிய வீட்டில் டீ குடிக்கிறேன் என நேற்று ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார். அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், சிலர் லண்டனில் வீடு வாங்கும் அளவுக்கு எப்படி காசு வந்தது என குஷ்புவை விமர்சித்த நிலையில், தற்போது கோபத்துடன் அவர் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. பாஜக கட்சியில் இணைந்து செயலாற்றி வரும் நடிகை குஷ்புவுக்கு அரசியல் ரீதியாக ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்த நிலையில் தான் … Read more

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு தனித் தட்டு.. டம்ளர்.. நறுக்குன்னு கேள்வி கேட்ட கோபிநாத்!

சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் சிறப்பான பல டாப்பிக்குகளில் இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வைத்துக் கொண்டு சிறப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளை கடந்து விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக கொண்டு சென்று வருகிறார். நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா விளங்குகிறது. கடந்த … Read more