தோல்விக்கு பொறுப்பேற்று முழு சம்பளத்தையும் மறுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்: பாய்காட் விபரீதங்கள்

மும்பை: இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அத்வைத் சந்தன் இயக்கிய இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோரும் நடித்திருந்தனர். திரைத்துறையினர் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சிங் சத்தா படம் பாய்காட் பிரச்சினையால் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதிகம் நம்பிய அமீர் கான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் டாப் ஸ்டாராக வலம் வரும் அமீர்கான், தனது படங்களில் புதுமையான … Read more

அடப்பாவிங்களா..முழுசா 3 நாள் கூட முடியல.. கோப்ரா முழு படமும் இணையத்தில் கசிந்தது!

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்தது சென்னை : சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கோப்ரா. படம் வெளியான முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால், மோசமான திரைக்கதையால் கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. கோப்ரா டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் … Read more

மலையாள சர்ச்சை நாயகனுடன் ஜோடி சேர்ந்த தமன்னா: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

கொல்லம்: தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். இந்தியில் தமன்னா நடித்துள்ள ‘பப்ளி பவுன்சர்’ திரைப்படம் வரும் 23ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இந்நிலையில், தமன்னா முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கனவு கன்னி தமன்னா இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், … Read more

கடைசி பாடலான பொன்னி நதி.. பம்பா பாக்யா உயிரிழந்ததை அறிந்து உடைந்து போன வந்தியத்தேவன் கார்த்தி!

சென்னை: பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே பொன்னி நதி பார்க்கணுமே பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வெறும் 49 வயதில் மாரடைப்பு காரணமாக இவரும் மறைந்து விட்டார். தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் 50 வயதுக்கு குறைவாக மாரடைப்பால் உயிரிழந்து வரும் சோகம் திரையுலகை விடாது துரத்தி வருகிறது. பம்பா பாக்யாவின் திடீர் மரணம் நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்களை வெகுவாக பாதித்துள்ளது. … Read more

அஞ்சாத பழுவேட்டையர்கள்… அதிரடியாக களமிறக்கிய பொன்னியின் செல்வன் டீம்: மிரட்டலான லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வனில் சரத்குமார், பார்த்திபன் இருவரின் கேரக்டர்கள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. சாதனை படைக்குமா பொன்னியின் செல்வன்? எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் வரை பலரும் முயற்சி செய்த பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் இப்போது சாத்தியமாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், … Read more

காலை 4 மணிக்கு விஜய்யை பீச்சுக்கு இழுத்துட்டு போவேன்.. சீக்ரெட் பகிர்ந்த எஸ்ஏசி!

சென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக கலந்துக் கொண்டுள்ளார் விஜய். விஜய் என்றாலே டெடிகேஷன்தான். தான் கமிட்டான படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் தன்னுடைய மற்ற விஷயங்கள் குறித்து யோசிப்பார் விஜய். நடிகர் விஜய் நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய 66வது படமான வாரிசு படத்தில் … Read more

இப்படியொரு அழகான படத்தை சமீபத்தில் பார்க்கல.. தனுஷ், நித்யா மேனன் சூப்பர்.. ஷங்கர் பாராட்டு!

சென்னை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டி உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி கிளப்பில் இணைந்து சன் பிக்சர்ஸ்க்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசையை இயக்குநர் … Read more

உங்களுக்கு 32 முறையா, எனக்கு 50 முறை. கணக்கை அதிகரிக்கிறேன்… கமலிடம் சொன்ன ஜாக்கி சான்

சென்னை: உலக அளவில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நடிகர் என்றால் அது ஜாக்கி சான் அவர்கள்தான். காரணம் சண்டைக் காட்சிகளில் கைதேர்ந்த அவர் அதனை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் வல்லவர். அதனால் குழந்தைகளாக இருக்கும்போதே அனைவரது மனதிலும் பதிந்து விடுவார். ஒருமுறை நம்முடைய கமல்ஹாசன் அவர்களும் ஜாக்கிசான் அவர்களும் சந்தித்துக் கொண்டபோது அவர்கள் பேசிக் கொண்டதை கமல்ஹாசன் ஒரு நிகழ்வில் பகிர்ந்துள்ளார். தசாவதாரம் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி … Read more

விக்ரமின் கோப்ரா இரண்டாம் நாள் வசூல் நிலவரம்: பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல ஓப்பனிங்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான ‘கோப்ரா’ படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால், மோசமான திரைக்கதையால் கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. திரைக்கதையில் சொதப்பிய கோப்ரா விக்ரம், அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என மெகா கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவான கோப்ரா திரைப்படம், நேற்று முந்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்ரமின் … Read more

பிரபல பின்னணிப் பாடகர் பாம்பே பாக்யா உடல்நலக் குறைவால் மரணம்: திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தவர் பாம்பே பாக்யா. சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த பாம்பே பாக்யா உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 49. பாம்பே பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால் சினிமா பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார் பாம்பே பாக்யா. திரைப்பட பாடல்களை பாடுவதற்கு முன்னதாக பல பக்திப் பாடல்களை பாடி பிரபலமானவர் பாம்பே பாக்யா. … Read more