கன்ஃபார்ம் ஆன த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்: ஜார்ஜ் குட்டிக்கு வெல்கம் ட்ரீட் கொடுத்த நெட்டிசன்கள்

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகியிருந்தது. திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து, த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் கேரக்டரான ஜார்ஜ் குட்டிக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரும்பி பார்க்க வைத்த த்ரிஷ்யம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், 2013ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம், மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கிய … Read more

பிரபல ஹீரோவின் வீடு அருகே சொகுசு வீடு வாங்கிய விஜய்…எதுக்கு இந்த புது வீடு தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, இடைவிடாமல் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தை முடித்ததும் வாரிசு படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், அடுத்ததாக தளபதி 67, தளபதி 68 படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜும், தளபதி 68 படத்தை அட்லியும் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் துப்பாக்கி 2 எடுக்க போவதாக சொல்லி வருகிறார். விஜய்யை அடுத்தடுத்து இயக்க போகிற டைரக்டர்கள் … Read more

பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சிகளை நீக்கியது ஏன்?…விளக்கம் தந்த மிஷ்கின்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. பாடகி, நடிகையான இவர், பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக பெண்களை மையப்படுத்திய படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ம் ஆண்டு வெளிவந்த பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி உள்ளார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிட்சுமணி, சந்தோஷ், பூர்ணா, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். … Read more

செப்டம்பரில் தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்: யாரும் எதிர்பார்க்காத அப்டேட் கொடுத்த இயக்குநர்

சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தனுஷின் நானே வருவேன் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிஸியான தனுஷ் அசுரன் வெற்றிக்குப் பின்னர் ஜகமே தந்திரம், மாறன், அத்ரங்கி ரே, தி கிரே மேன் என அடுத்தடுத்து தனுஷின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. … Read more

கொச்சி சென்ற கோப்ரா படக்குழு… தரமான சம்பவம் செய்த மலையாள ரசிகர்கள்… மிரண்டுப் போன சியான் விக்ரம்!

கொச்சி: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்ற கோப்ரா படக்குழுவினருக்கு, மலையாள ரசிகர்கள் சிறப்பான சம்பவம் செய்துள்ளனர். பரபரக்கும் கோப்ரா டூர் விக்ரம் நடிப்பில் பயங்கரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கோப்ரா’ படம், வரும் 31ம் தேதி வெளியாகிறது. அஜய் ஞானமுத்து மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள கோப்ரா படத்தில், விக்ரம் பல … Read more

குக் வித் கோமாளி புகழ் வீட்டில் விசேஷம்…திருமண நாளை அழகாக அறிவித்த ஜோடி

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்யும் செயல்கள் பலரின் ஃபேவரைட். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வர துவங்கின. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களில் சிறிய ரோலில் நடித்து பெரிய திரையில் தலைகாட்டி விட்டார் புகழ். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஆகஸ்ட் 16 1947, மிர்ச்சி சிவாவின் காசே தான் … Read more

இயக்குநர் மாரி செல்வராஜ் கழுத்தில் துப்பாக்கி வைத்த உதயநிதி.. என்ன வில்லத்தனம்!

சென்னை : உதயநிதி ஸ்டாலின் சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். Recommended Video KiruthigaUdhayanidhi | இந்த படம் பார்த்த பின் FAMILY TRIP confirm சமீபத்தில் இவரது நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு அவருடன் நடித்து வருகின்றனர். நடிகர் உதயநிதி … Read more

அடுத்த ராக்கி பாய் இவர் தான்…கன்னடத்திலும் என்ட்ரி கொடுக்கும் விக்ரம்

சென்னை : கோலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். டைரக்டர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்து வரும் விக்ரம் நடித்துள்ள கோப்ரா ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தற்போது கோப்ரா படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கேரளா, பெங்களூருவை … Read more

இன்று முதல்…விக்ரம் ஃபேன்ஸ் ரெடியா?… கோப்ரா முழு அப்டேட் இதோ

சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. விக்ரம 20 க்கும் மேற்பட்ட கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் செம வரவேற்பை … Read more

இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருதா?…தனுஷ், செல்வராகவனின் செம மாஸ்டர் பிளான்

சென்னை : கோலிவுட்டில் பிரபலமான வெற்றி கூட்டணியான செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி உள்ளன. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் ரிலீசாகும் அதே செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஏற்பாடுகள் நடந்து … Read more