பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: இந்திய உளவுத் துறை, என்ஐஏ தகவல்

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா தாக்குதலை தலைமையேற்று நடத்தியுள்ளார் என்று இந்திய உளவுத் துறை, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவத்தில் எஸ்எஸ்ஜி என்ற சிறப்பு கமாண்டோ பிரிவு செயல்படுகிறது. … Read more

கலைஞர் பல்கலைக்கழக மசோதா உட்பட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் என்னென்ன?

சட்டப்பேரவையில் நேற்று, தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு உரிமம் வழங்கும் முறையை எளிதாக்கி, ஆன்லைனில் வழங்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, … Read more

நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ பயன்படுத்தலாம்: பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் புலனாய்வு நிறுவனமான என்எஸ்ஓ-வின் ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு புகார் எழுந்தது. சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியின் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கள் செல்போன்களை … Read more

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா – கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் … Read more

“திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி

சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று … Read more

‘பஹல்காம் தாக்குதலின்போது ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டரின் ‘அல்லாஹு அக்பர்’ முழக்கம் இயல்பானதே’

புதுடெல்லி: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டது இயல்பான ரியாக்‌ஷன் தான் என என்ஐஏ கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சாகச அனுபவத்துக்கான ஜிப் லைனில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதன்போது தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அந்த சுற்றுலா … Read more

Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்திய அமேசான்: மஸ்க் உடன் மோதும் பெசோஸ்

புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம். உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் … Read more

பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்: தமிழக விவசாயிகள் கண்டனம்

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள … Read more

‘பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, … Read more

சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் … Read more