ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று நிறைவு: இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வந்த உண்மை கண்டறியும் சோதனை இன்றுடன் நிறைவடைகிறது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்ததொழில் அதிபருமான ராமஜெயம்,2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சிசென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை தற்போது, சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கியசிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையே, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை … Read more

குஜராத் | சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி விரோதமாக செயல்பட்ட 38 பேர் காங்கிரஸிலிருந்து நீக்கம்

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட 38 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1,5 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. மோடி அலையின் தாக்கத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி … Read more

மின்சார திருத்த சட்டத்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயராது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்சார திருத்தச் சட்டத்தால் மாதம்ஒருமுறை மின் கட்டணம் உயராதுஎன மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள் ளார். திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளுக்கான இரண்டாம் நாள் நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். இதில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மின்சார திருத்தச் சட்டம் காரணமாக மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படும் … Read more

காப்பீடுக்காக அப்பாவியை கொலை செய்த விவகாரம் – குற்றவாளியை காட்டிக் கொடுத்த தீயில் கருகாத கால்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டம், டெக்மல் வெங்கடாபூர் பகுதியில் கடந்த 9-ம் தேதி, ஊருக்கு வெளியே திடீரென ஒரு கார் எரிய தொடங்கியது. பொதுமக்கள் ஓடிச்சென்று காப்பாற்றுவதற்குள், அதில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். இது குறித்து மேதக் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தியதில், இதற்கெல்லாம் காரணம் தெலங்கானா தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் தர்மா (48) என்ற ஊழியர்தான் என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி புனேவில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். 2026ஆம் ஆண்டு வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தகுதியை பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது. அதனால் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவோம். கூட்டணிக் … Read more

இந்தியர்களின் பார்வையில் அமெரிக்கா, ரஷ்யா நட்பு நாடு பாகிஸ்தான், சீனா எதிரிகள் – கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்திய இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பெரும்பாலான இளைஞர்கள் ரஷ்யாவை மிகுந்த நட்பு நாடாகவும், அடுத்ததாக அமெரிக்காவை நட்புநாடாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானை எதிரிகளாகவும் பார்க்கின்றனர். ஆனால் நடுநிலை வகிக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது. உக்ரை னையும், ஈரானையும், இந்தியர்கள் நடுநிலையாக பார்க்கின்றனர். உக்ரைன் போருக்கு ரஷ்யாதான் காரணம் என 38 சதவீத இந்தியர் கள் குற்றம் சாட்டுகின்றனர். … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு – முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த திட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

சர்ச்சைக்குரிய திரைப்படங்களை மறு தணிக்கை செய்ய தனிக்குழு – இந்து துறவிகள் சார்பில் அறிவிப்பு

புதுடெல்லி: பாலிவுட்டின், ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற ஆபாச நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதுபோல் இந்து மதத்திற்குஎதிராக திரைப்படங்களில் சர்ச்சைகாட்சிகள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் எழுகிறது. இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களின்துறவிகள் சார்பிலான தர்மசபைகூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் நேற்று … Read more

கடலோர மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 21-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி, … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் வகிர் நாளை மறுநாள் சேர்ப்பு

புதுடெல்லி: ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்குநிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி … Read more