விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 சிறுவர் உட்பட 7 பேர் மீது 1,612 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையையும், சிறுவர்கள் 3 பேர் மீது விருதுநகரில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையையும் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிலர்மீது புகார் வந்தது. இதுதொடர்பாக கடந்த மார்ச்சில் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் கோயில் – மசூதி சர்ச்சைகள்: வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 என்ன சொல்கிறது?

கோயில் – மசூதி சர்ச்சைகள் நாடு முழுவதும் அதிக அளவில் எழுந்து வரும் நிலையில், கடந்த 1991-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது. வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அங்கு சிவலிங்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு மதரீதியான விவாதங்களை நாடு முழுவதும் தொடக்கி வைத்துள்ளது. இதற்கிடையே, மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே உள்ள விவகாரம் … Read more

கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

ஜெட்டா: கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா பரவல் அதிகரித்தபோது உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தன. அத்துடன் மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்தையும் நிறுத்தின. இதுகுறித்து சவுதி அரேபியா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய வெயில்: சென்னை விமான நிலையத்தில் 104 டிகிரி பதிவு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கடும் வெயில் வாட்டி வந்தது. கடந்த4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் மேலும் கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசானி புயல் உருவானதைத் தொடர்ந்து, அதன் தாக்கத்தால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவியது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் 100 … Read more

பட்டியலின மடாதிபதியின் எச்சில்பட்ட உணவை சாப்பிட்ட முஸ்லிம் எம்எல்ஏ

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை காங்கிரஸார் சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் சாம்ராஜ்பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, பட்டியலின மடாதிபதி நாராயண சுவாமி ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது இனிப்பை எடுத்து பட்டியலின மடாதிபதிக்கு ஊட்டினார். பதிலுக்கு மடாதிபதி கீழே வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து ஜமீர் அகமதுவுக்கு ஊட்ட முயன்றார். அப்போது சாமியாரை தடுத்த … Read more

13 நாடுகளின் புதிய கூட்டமைப்பு தொடக்கம் – பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை (ஐபிஇஎப்) உருவாக்கி உள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று முன்தினம் டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் … Read more

“புரிதலும் இல்லை… புரிந்துகொள்ளும் பக்குவமும் இல்லை…” – அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்

கரூர்: “பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை. புரிந்துகொள்ளும் பக்குவமும் இல்லை. அதனால் தவறான பொய்த் தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார். கரூர் அருகேயுள்ள பஞ்சமாதேவியில் இன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி … Read more

மதரசாக்களில் முறையான கல்வி இல்லை: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா கருத்து

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (53) தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மதரசாக்கள் இருக்கக் கூடாது என நான் எப்போதும் கூறி வருகிறேன். ஏனெனில், அங்கு முறையான கல்வியைவிட மத போதனைக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குழந்தைகளுக்கு குரானை சொல்லிக் கொடுக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் அறிவியல், கணிதம் மற்றும் இதர பாடங்களையும் சொல்லித் தர வேண்டும். இந்த வார்த்தை (மதரசா) மறைந்து போக வேண்டும். இந்த … Read more

ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஜவுளி முதல் ஆட்டோ மொபைல் துறை வரை தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை நிலவுவதாகவும், முதலீடு செய்ய வருமாறும் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று டோக்கியோவில் அந்நாட்டின் பெரிய தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜப்பானிலுள்ள என்இசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ என்டோ, சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் மசாயோஷி … Read more

அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடக்கம்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,000 மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காகவும், பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வும் நாளை தொடங்கி 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த முறை … Read more